என்னடா இது..கான்ஜூரிங் ரூம் செட் போட்ருக்கீங்க.. பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கன்ஃபெஷன் ரூமின் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 4 Tamil Promo | Gossip, Highlights, Trolls

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று மாலை தொடங்குகிறது. இதனை காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடந்த சில நாட்களாய் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. விஜய் டிவியும் தனது டிவிட்டர் பக்கத்தில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வந்தது.

விஜய் டிவி

விஜய் டிவி

பார்வையாளர்களுக்கும் பிக்பாஸ் குரலில் பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வந்தது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அப்டேட்டுகளும் புரமோஷன்களும் விஜய் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி வந்தது.

விஜய் டிவி

விஜய் டிவி

பார்வையாளர்களுக்கும் பிக்பாஸ் குரலில் பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வந்தது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அப்டேட்டுகளும் புரமோஷன்களும் விஜய் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி வந்தது.

கன்ஃபெஷன் ரூம்

கன்ஃபெஷன் ரூம்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்றுள்ள கன்ஃபெஷன் ரூம் குறித்து டிவிட்டியிருக்கிறது விஜய் டிவி. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியின் பிரமாண்ட அரங்குகளில் பிக்பாஸ் வீட்டின் செட் அமைக்கப்பட்டுள்ளது.

ஆடம்பரமான வீடு

ஆடம்பரமான வீடு

கடந்த சீசன்களில் இடம் பெற்ற ஆடம்பரமான பிக்பாஸ் வீட்டை போன்றே இம்முறையும் பிக்பாஸ் வீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாடுலர் கிட்சன், லிவிங் ஏரியா, நீச்சல் குளம், டைனிங் ஹால், படுக்கையறை என அனைத்து வசதிகளும் இருக்கும் என தெரிகிறது.

மாறுபட்ட கன்ஃபெஷன் ரூம்

மாறுபட்ட கன்ஃபெஷன் ரூம்

இந்நிலையில் பிக்பாஸ், ஹவுஸ் மேட்ஸ்களுடன் பேசும் கன்ஃபெஷன் ரூம்மின் போட்டோவை விஜய் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த சீசன்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டுள்ளது கன்ஃபெஷன் ரூம்.

ஒளிரும் உருவங்கள்

ஒளிரும் உருவங்கள்

வித்தியாசமான நாற்காலி, அறையின் சுவர்களில் ஹாரர் படங்களில் இடம்பெற்ற வண்ணம் தீட்டப்பட்ட ஒளிரும் உருவங்கள் என மிரட்டலாக உள்ளது. அங்குள்ள நாற்காலிக்கு முன்பாக போட்டியாளர்கள் பேசுவதற்கு ஏதுவாக மைக் வைக்கப்பட்டுள்ளது.

கான்ஜூரிங் ரூம்

கான்ஜூரிங் ரூம்

பிக்பாஸ் வீட்டின் இந்த கன்ஃபெஷன் ரூமின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை தெரிவித்து வருவதோடு கமெண்டுகளை போட்டும் பங்கம் பண்ணியுள்ளனர். கன்ஃபெஷன் ரூமை பார்த்த இந்த நெட்டிசன், கன்ஃபெஷன் ரூம் வைக்க சொன்னா கான்ஜூரிங் ரூம் செட் பண்ணி வச்சிருக்கானுங்க என்று வடிவேலுவின் போட்டோவுடன் கலாய்த்துள்ளனர்.

என்ன கொடூரம் டா

என்ன கொடூரம் டா

மேலும், என்ன கொடூரம் டா இது என்றும், தலைவன் க்ரட்டாஸ் இங்க என்ன பண்றாரு என்று கேட்டு அங்குள்ள பொம்மையை பதிவிட்டுள்ள கேட்டுள்ளனர். மற்றொரு நெட்டிசனான இவர், பின்னாடி மனநோயாளிகள் பொம்மையா இருக்கு. கத்தில எச்சை தொட்டு குத்துங்க, நெகடிவ் ஸ்பிரிட் எல்லாம் செத்துடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாமினேஷன்

நாமினேஷன்

பிக்பாஸ் வீட்டின் கன்ஃபெஷன் ரூமில் இருந்துதான் ஹவுஸ் மேட்ஸ் சக போட்டியாளர்களை நாமினேட் செய்வார்கள், ஹவுஸ்மேட்ஸுடன் பல முக்கிய விஷயங்களையும் முடிவையும் பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமில் இருந்துதான் எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X