ஜீவா படத்தை பார்க்க ரீயூனியன் ஆன பிக்பாஸ் பிரபலங்கள்.. அவங்க மட்டும் மிஸ்ஸிங்.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: ஜீவாவின் களத்தில் சந்திப்போம் படத்தை பார்க்க பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் மீண்டும் ரீயூனியன் ஆன போட்டோஸ் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மாதம் 17ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதில் பங்கேற்ற பிரபலங்கள் வெளியே வந்த பிறகு அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.

அன்பு கேங் பாண்டிங்

அன்பு கேங் பாண்டிங்

கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் குறிப்பிட்ட போட்டியாளர்களுக்குள் நல்ல பாண்டிங் உள்ளது. குறிப்பாக அன்பு கேங்கை சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வருகின்றனர்.

அர்ச்சனா தலைமையில்

அர்ச்சனா தலைமையில்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் முன்பே, அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தனியாக சந்தித்தனர். அதனை தொடர்ந்து அர்ச்சனா தலைமையில் அன்பு கேங்கை சேர்ந்தவர்கள் சோம சேகர் வீட்டிற்கு சென்றனர்.

களத்தில் சந்திப்போம்

களத்தில் சந்திப்போம்

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள களத்தில் சந்திப்போம் படத்தின் பிரிவியூ ஷோவை அன்பு கேங்கினர் மற்றும் சில போட்டியாளர்கள் சேர்ந்து சென்று பார்த்துள்ளனர்.

மாஸ்டரால் தள்ளிப்போனது

மாஸ்டரால் தள்ளிப்போனது

ஜீவா மற்றும் அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் ஜனவரி 28 ஆம் தேதி ரிலிஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் மாஸ்டர் படத்தின் வெளியீட்டால் பிப்ரவரி 5 ஆம் தேதியான இன்று ரிலீஸாகியுள்ளது.

ப்ரிவியூ ஷோ..

ப்ரிவியூ ஷோ..

இது தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் 90 ஆவது தயாரிப்பாகும். இந்நிலையில் படத்தின் ப்ரிவியூ ஷோவை நேற்று சோம சேகர், ஜித்தன் ரமேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, ரியோ, அனிதா, அனிதாவின் கணவர் பிரபாகரன், ரேகா, கேபி, அர்ச்சனா உள்ளிட்டோர் சேர்ந்து பார்த்துள்ளனர்.

ஆரி சனம் மிஸ்ஸிங்

ஆரி சனம் மிஸ்ஸிங்

ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றதை தொடர்ந்து, பிக்பாஸ் பிரபலங்களுக்காக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஆரி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுச்சி, ஷிவானி, நிஷா, ஆஜித் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X