பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்க போகும் பிரபலங்கள் இவர்களா? தீயாய் பரவும் லிஸ்ட்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் என ஒரு லிஸ்ட் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கொரோனா வைரஸின் மிரட்டலால் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு கடந்த 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

ஆனாலும் கொரோனாவின் கோர தாண்டவம் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

பிக்பாஸ் சீசன் 4

பிக்பாஸ் சீசன் 4

எப்படியும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையில் சினிமாத்துறை சார்ந்த சில பிரிப்பரேஷன் வேலைகள் சைலன்ட்டாக நடை பெற்றுவருகின்றன. அந்த வகையில் சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் பிக்பாஸ் சீசன் 4க்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 நாட்கள்

100 நாட்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முதலில் ஒளிபரப்பாக தொடங்கியது. 100 நாட்களுக்கு மேல் வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் 15 பேருடன் தங்களின் வேலைகளை தாங்களே செய்து வீட்டில் இருக்க வேண்டும் என்பதே போட்டியின் விதி. 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டில் மக்கள் ஆதரவுடன் இருப்பவர்கள் வெற்றியாளராக கருதப்படுவார்கள்.

முகேன் வின்னர்

முகேன் வின்னர்

வெற்றி பெறும் நபருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ் வின்னர் ஆனார். அது முதல் தொடர்ந்து இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளது. இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகாவும் மூன்றாவது சீசனில் மலேசியாவை சேர்ந்த பாடகர் முகேன் வின்னர் ஆனார்.

வரவேற்பு குறையவில்லை

வரவேற்பு குறையவில்லை

இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போதும் இதற்கான வரவேற்பு ஒன்றும் குறையாமல் உள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் சீசன் 4ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபலங்களின் பெயர்

பிரபலங்களின் பெயர்

அதன்படி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளவர்களின் பட்டியல் என பிரபலங்களின் பெயர் அடங்கிய பட்டியல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நடிகைகள் சாந்தினி, விசித்ரா, ஜெயஸ்ரீ, ரட்சிதா, டிடி, சின்மயி, மீனா. ரம்யா பாண்டியன், வித்யுலேகா ராமன், சஞ்சனா சிங் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

உறுதிப்படுத்தப்படவில்லை

உறுதிப்படுத்தப்படவில்லை

இதேபோல் நடிகர்கள் விமல், சரண் சக்தி, இர்பான், ஈஸ்வர், ராதா ரவி, ரமேஷ் திலக், சத்யன், ஸ்ரீமண் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த பட்டியல் தொடர்பாக சேனல் தரப்பில் இருந்தும் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் தரப்பில் இருந்தும் எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X