புதிய வாழ்க்கை.. புதிய எதார்த்தம்.. புதிய துவக்கம்.. அசத்தல் கெட்டப்பில் கமல்.. பிக்பாஸ் நியூ புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரமோ கமலின் அசத்தலான கெட்டப்பில் வெளியாகியுள்ளது.
Recommended Video
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று மாலை தொடங்க உள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள்.
இதற்கான படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று நடைபெற்றது. போட்டியாளர்களின் பர்ஃபார்மன்ஸ்களுடன் கலை நிகழ்ச்சிகள் களைக்கட்ட பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இன்று மாலை 6 மணிக்கு
இந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்ப படவுள்ளது. இதனை தொடர்ந்து நாளை முதல் இரவு 9.30 மணி முதல் 10. 30 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கமல் புதிய கெட்டப்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரமோ இன்று வெளியாகியுள்ளது. இதில் கறுப்பு நிற கோட் சூட்டில் பெல்ட்டேல்லாம் தொங்க பிரமாண்ட மேடையில் அட்டகாசமாய் என்ட்ரி கொடுக்கிறார் கமல். மேலும் புதிய வாழ்க்கை.. புதிய எதார்த்தம்.. புதிய துவக்கம்.. பிக்பாஸ் சீசன் 4 இன்று.. என தனக்கே உரிய ஸ்டைலில் கூறியிருக்கிறார் கமல்.

கலை நிகழ்ச்சிகள்
இடையிடையே ஃபிளவர் பாட்ஸ் வெடிக்க, அசத்தல் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ள வீடியோவில் தெரிகிறது. இதன் மூலம் இத்தனை நாட்களாய் எப்போது பிக்பாஸ் சீசன் 4 தொடங்கும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று மாலை ஒரு பெரிய ட்ரீட் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

கமல் டிரெஸ்
புரமோவை பார்த்த ரசிகர்கள், மறுபடியும் முதல்ல இருந்தா என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் கமல் bathrobe ட்ரெஸ் மாதிரி எனக்கு மட்டும் தான் தெரியுதா? ஆரம்பத்திலே ஏன்டா எனக்கு மட்டும் இப்படி தோணுது என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

சீசன் 4
அடுத்த 100 நாட்களுக்கு சிரிப்புக்கு, அழுகைக்கும், கோமளித்தனத்துக்கும் கேலிக்கும் பஞ்சம் இருக்காது. நாம் பலரின் உண்மை முகம் காண போகும் நிகழ்வு. பிக்பாஸ் சீசன் 4 காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











