லைட்ஸ்.. கேமரா.. ஆக்ஷன்.. தொடங்கியது பிக்பாஸ் சீசன் 4 ஷுட்டிங்.. பிரபல நடிகர் வெளியிட்ட போட்டோ!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிக்ழ்ச்சிக்கான ஷுட்டிங் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 4 Telugu Official Promo • Nagarjuna

இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி 2006 ஆம் ஆண்டு முதல் இந்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இந்தியில் 13 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.

இந்தியில் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து கன்னடா மற்றும் பெங்காலி மொழியில் 2013ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

3 சீசன்கள் நிறைவு

3 சீசன்கள் நிறைவு

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 3 சீசன்கள் நிறைவு பெற்றுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல்

மூன்று சீசன்களையும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 தொடங்குமா என்பது கேள்வி குறியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4

பிக்பாஸ் சீசன் 4

அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பிரபலங்கள் இவர்கள்தான் என்றும் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் பிக்பாஸ்

மீண்டும் பிக்பாஸ்

தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கான டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் கடந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் நாகர்ஜூனா தனது புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு, மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

லைட்ஸ் கேமரா ஆக்ஷன்

லைட்ஸ் கேமரா ஆக்ஷன்

இதுதொடர்பான அவரது டிவிட்டில், மீண்டும் லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் ஃபுளோரில்.. வாட் எ வாவ்.. வாவ் என பதிவிட்டுள்ளார். நாகர்ஜூனாவின் இந்த ட்விட்டர் பதிவைப் பார்த்த பலரும், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான புரமோ ஷூட்டிங் தொடங்கியிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் எப்போது?

தமிழில் எப்போது?

தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த மாதம் முதலே ஒளிபரப்பாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X