மாற்றப்படுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரம்? தீயாய் பரவும் தகவல்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நேரம் மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டும் போட்டியாளர்கள் பலரும் வெளியேறி விட்டனர்.

8 பேர் மட்டுமே..
18 போட்டியாளர்கள் இருந்த வீட்டில் தற்போது வெறும் 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்றும் ஒரு போட்டியாளர் வெளியேறிவிட்டால் அதன்பிறகு 7 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பார்கள்.

நேரம் மாற்றம்?
இதனால் நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு சுவாரசியமாக இருக்குமா என்பது சந்தேகமே. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரம் மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

சனி மற்றும் ஞாயிறு..
அதாவது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது. கமல் வரும் நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 9.30 மணி முதல் 11 மணி வரை ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.

திங்கள் கிழமை முதல்
இந்நிலையில் வரும் திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நேரம் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.

எப்போது பிக்பாஸ்?
இதுவரை பிக்பாஸ் ஒளிபரப்பான இரவு 9.30 மணிக்கு ராஜா ராணி 2 சீரியல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிக்பாஸ் நேரம் ஒளிபரப்பாகும் எப்போது என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

ரசிகர்கள் கோரிக்கை
கமல் மூலமாக நேர மாற்றத்தை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரவு 10க்கு பிக்பாஸ் ஒளிபரப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை 10 மணிக்கு மேல் பிக்பாஸ் ஒளிபரப்பு தொடங்கினால் பார்ப்பதற்கு கடினமாக இருக்கும் ஆகையால் முன்கூட்டியே ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











