ஆடிய ஆட்டம் என்ன…பேசிய வார்த்தை என்ன… அபிஷேக்கை கலாய்க்கும் இணையவாசிகள் !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ஐக்கி பெர்ரி இந்த வார எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்படுவதாக அறிவிக்கிறார் கமல்.
சின்னப்பொண்ணு, அபிஷேக் இருக்கிறார்கள் இதில் யார் வெளியேறுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அபிஷேக்கை வெச்சி செய்து வருகின்றனர்

நேற்றைய எபிசோடு
நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேட் ஆன 9 பேரில் அக்ஷரா, பாவனி, இசைவாணி, தாமரை செல்வி ஆகிய 4 பேர் காப்பாற்றப்பட்டு இருந்தனர். ஆக மீதம் உள்ள அபிநய், ஐக்கி பெர்ரி, அபிஷேக், பிரியங்கா, சின்ன பொண்ணு ஆகிய 5 பேர் முடிவுக்காக காத்து இருக்கின்றனர்.

யார் போவார்கள்
தற்போது வெளியாகி உள்ள முதல் ப்ரோமோவில், ஐக்கி பெர்ரி மற்றும் அபிஷேக், சின்னப்பெண்ணு அமர்ந்து இருக்கிறார்கள். யார் போவாங்கனு எதிர்பார்க்குறீங்க...அது எல்லாம் நான் கேட்கப்போவது இல்லை ஸ்ரைட்டா சொல்லிடுறேன் என்கிறார்... அதற்கு முன்பாக ஒருவரை காப்பாற்ற வேண்டி உள்ளது என்று கூறி ஐக்கி பெர்ரியின் பெயரை கூறுகிறார் கமல். இதைடுத்து, ஐக்கி இந்த வாரம் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஆடிய ஆட்டம் என்ன
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டின்ஸ் ஒருவர், அபிஷேக் முகத்த பார்க்கும் போது எனக்கு ஒரு பாட்டு தான் ஞாபகம் வருது........ஆடிய ஆட்டம் என்ன?பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? என்று பகிர்ந்துள்ளார்.

ஆட்டம் அடங்கி போச்சு
மற்றொரு நெட்டிசன்ஸ், அபிஷேக்கே தன் வாயால சொன்னாரே, நான் ஒரு ஆட்டம் ஆடுவேன்னு அதான் இப்போ எல்லாம் அடங்கிப் போகுது என்று பகிர்ந்துள்ளார்.

சின்னப்பொண்ணு எவிக்ட் ஆவார்
மற்றொரு பிக்பாஸ் பிரியர், அபிஷேக் evicted என்றால்.... இனிமேல்தான் அனைவரும் விழித்தெழுந்து விளையாட வேண்டிய தருணம்... சும்மாவே இருக்கும் மதுமிதா சின்னபொண்ணு அபினய் evict ஆவார்கள்... தாமரை இசை சுருதி சொந்தமாக சிந்திக்கட்டும் மனதுக்கும் உடலுக்குமான போராட்டம் என்றுணர்ந்து அனைவரும் போராடட்டும்..வாழ்த்துக்கள் என்று பகிர்ந்துள்ளார்.

கம்மியான வோட்
இன்னொரு இணையவாசி, டேய்... சினிமா சன்.. சின்னப்பொண்ணு விடவாடா கம்மியா வோட் வாங்கி இருக்க என்று கிண்டல் அடித்துள்ளார்.

போண்டா முக்கன்
மற்றொரு நெட்டிசன்ஸ், டாப் 5க்கு போறமாதரியே பேசிகிட்டு இருந்த போண்டா மூக்கன் பாட்டம் 3ல போயிட்டான் என்று செமயாக கலாய்த்து உள்ளார்.


Click it and Unblock the Notifications











