Just In
- 5 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 6 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 8 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 9 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் 'அந்த' டாஸ்க்கை கொடுத்த பிக்பாஸ்.. கடும் வாக்குவாதத்தில் ஹவுஸ்மேட்ஸ்.. ரணகளமாகும் வீடு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கால் செண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
கடந்த வாரம் தொடங்கிய இந்த டாஸ்க்கால் அந்த வாரம் முழுக்கவுமே பெரும் பரபப்பாக இருந்தது.

அனல் பறந்த பார்ட் 2
கடந்த வாரத்தில் இந்த டாஸ்க்கை முடிக்க முடியாமல் போனதால் நேற்று முதல் மீண்டும் இதனை பார்ட் 2வை தொடங்கினர்.
இதில் பாலாஜிக்கும் ஆரிக்கும் இடையேயான உரையாடலால் அனல் பறந்தது.

காய்ச்சி எடுத்த அனிதா
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் ரியோவுக்கு கால் செய்த அனிதா, அவர் முகமூடி போட்டுக்கொண்டு நல்லவர் போல் நடிப்பதாக கூறி காய்ச்சி எடுத்தார். அனிதாவின் கேள்விகளால் செம டென்ஷனானார் ரியோ.

சண்டை போடும் ஹவுஸ்மேட்ஸ்
இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதன் மூலம் இன்றுடன் கால் செண்டர் டாஸ்க் நிறைவடைவது தெரியவந்துள்ளது. இந்த புரமோவில் கார்டன் ஏரியாவில் ரேங்குக்காக ஹவுஸ்மேட்ஸ் சண்டை போட்டு கொள்கின்றனர்.

டாஸ்க்கில் யார் பெஸ்ட்?
அதாவது நடந்து முடிந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் தங்களின் முழு முயற்சியையும் வெளிக்காட்டி, டாஸ்க்கை முறையாக செய்த நபர்கள், முழு முயற்சியையும் வெளிக்காட்டாமல் டாஸ்க்கை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் 1 லிருந்து 13 வரை ரேங்க் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார் பிக்பாஸ்.

போட்டி போடும் போட்டியாளர்கள்
இதற்காக ஒன்று முதல் 13 வரை நம்பர்கள் பொருத்தப்பட்ட பெடஸ்டன்ட்டுகள் கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் நிற்க போட்டியாளர்கள் நீ, நான் என போட்டி போடுகிறார்கள்.

புகையும் பிரச்சனை
ஒரு பக்கம் பாலாஜி, ஒரு பக்கம் சனம் ஷெட்டி, கேபி, அர்ச்சனா, ரம்யா என அனைவரும் போட்டி போட்டு ஆர்க்யூ செய்கின்றனர். இதனால் பிக்பாஸ் வீடே ரணகளமாகிறது. ஏற்கனவே ஒரு முறை ரேங்க் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் போது எழுந்த பிரச்சனையே இன்னும் பிக்பாஸ் வீட்டில் புகைந்து கொண்டிருக்கிறது.

பெரும் ரணகளம்
இதில் மீண்டும் இப்படி ஒரு தரம் பிரிக்கும் டாஸ்க்கை கொடுத்து பிக்பாஸ் வீட்டில் மீண்டும் கொளுத்திப் போட்டுள்ளார். இன்று கொடுக்கப்பட்டுள்ள இந்த டாஸ்க்கால் பிக்பாஸ் வீட்டில் பெரும் ரணகளம் ஏற்படும் என தெரிகிறது.