twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதிலும் முட்டைதானா.. இழுத்து போர்த்தி தூங்கும் பாலா.. கடுப்பாகும் ஹவுஸ்மெட்ஸ்.. என்னவாக போகுதோ!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ பிபியை எகிற வைத்துள்ளது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கடிகார முள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த டாஸ்க் தொடர்ந்து 45 மணிநேரம் இரவு பகல், வெயில் மழை என தொடருகிறது.

    காலத்தை வெல்லும் அணி

    காலத்தை வெல்லும் அணி

    இதில் ஹவுஸ்மெட்ஸ் மூன்று பேர் கொண்ட 5 குழுக்களாக பிரிந்து மூன்று மணி நேரத்தை சரியாக கணிக்க வேண்டும். யார் துல்லியமாகவும் அல்லது மிக நெருக்கமாகவும் கணிக்கும் அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.

    இரண்டாவது புரமோ

    இரண்டாவது புரமோ

    இந்த டாஸ்க் நள்ளிரவிலும் தொடர்ந்து நடைபெற்றது முதல் புரமோவில் தெரியவந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

    இழுத்து போர்த்தி..

    இழுத்து போர்த்தி..

    இதில் விடியற்காலையில் கடிகார முள்ளாய் பாலாஜி மற்றும் அவரது டீம் நிற்க வேண்டும். ரம்யா பாண்டியனும், சுச்சியும் கார்டன் ஏரியாவுக்கு வந்து விட்டனர். ஆனால் பாலாஜி மட்டும் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்குகிறார்.

    எழுந்திரிக்காமல்.

    எழுந்திரிக்காமல்.

    ஹவுஸ்மெட்ஸ் ஒவ்வொருவராய் போய் எழுப்பியும் எழுந்திரிக்காமல் குப்புறப்படுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறார். சுச்சியும் ரம்யாவும் டாஸ்க்கை தொடங்க, சனம் ஷெட்டி பாலாவுக்கு பதிலாய் நிற்கிறார்.

    போகவே மாட்டேன்

    போகவே மாட்டேன்

    அனிதா மீண்டும் போய் பாலாஜியை எழுப்புகிறார். அப்போது எங்களுடையது முடிந்துவிட்டது, உங்களுடையதுதான் போகிறது என்று கூறுகிறார். இதனால் கடுப்பாகும் பாலா, ஏன் இப்படி பதறீங்க.. அப்புறம் நான் போகவே மாட்டேன் என மிரட்டுகிறார்.

    எகிறும் பிபி..

    எகிறும் பிபி..

    தொடர்ந்து பாலாவுக்காக நிற்கும் சனம் ஷெட்டி, நிற்பது எனக்கு பிரச்சனையில்லை, ஆனால் 5 நிமிடத்திற்கு மேல் சென்றால் பாயிண்ட் போய்விடும் என்கிறார். இப்படியாக பார்க்கும் போதே பிபியை எகிற வைத்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ.

    முட்டை மதிப்பெண்கள்

    முட்டை மதிப்பெண்கள்

    கடந்த வாரம் நடந்த பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில், பாலாஜி பத்திரத்தை திருடி வைத்துக்கொண்டு தவறாக விளையாடினார். இதனால் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் முட்டை மதிப்பெண்களை கொடுத்த பிக்பாஸ், வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களில் கையை வைத்தார்.

    கடுப்பான ஹவுஸ்மெட்ஸ்

    கடுப்பான ஹவுஸ்மெட்ஸ்

    இதனால் பாதிக்கு பாதி மதிப்பெண்களையாவது கொடுங்கள் என கெஞ்சினர் ஹவுஸ்மெட்ஸ். இந்நிலையில் இம்முறையும் டாஸ்க்கில் பங்கேற்காமல் சோம்பேறித்தனமாக தூங்கிக் கொண்டிருக்கின்றார் பாலாஜி. இதனால் இந்த முறையும் முட்டை வாங்க வைத்துவிடுவாரோ பாலாஜியால் கடுப்பாகியுள்ளனர் நெட்டிசன்கள்.

    English summary
    Biggboss second promo raises BP of housemates and viewers. In that promo Balaji is not interested to do task.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X