நாளைக்கு எனக்கும் அதான்.. உனக்கும் அதான்.. சுதாரிக்கும் ஆரி.. செம மூடு அவுட்டில் ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

ட்ரூ வாரியர் சனம் !ஓவரா ஒப்பாரி வச்சு அழுத அனிதா | Bigg Boss Highlights

பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி நேற்று வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

சனம் ஷெட்டி வெளியேறியதால் ஹவுஸ்மேட்ஸும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நேற்று சனம் ஷெட்டி வெளியேறி கமலை சந்தித்தார்.

எவிக்ஷனுக்கு தகுதியில்லாதவர்

எவிக்ஷனுக்கு தகுதியில்லாதவர்

அதனை தொடர்ந்து அங்கிருந்தப்படியே ஹவுஸ்மேட்ஸை சந்தித்தார் சனம் ஷெட்டி. அப்போது பேசிய ஆரி, சனம் நீங்கள் தான் ட்ரூ வாரியர், இந்த எவிக்ஷனுக்கு நீங்கள் தகுதியில்லாதவர் என்று கூறி வருத்தப்பட்டார்.

இரண்டாவது புரமோ

இரண்டாவது புரமோ

சனம் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் என்ன நடக்கிறது என சுதாரிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

வெளியே போறாங்க

வெளியே போறாங்க

இதில் ஆரி, அனிதா, பாலாஜி, ஷிவானி ஆகியோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசுகின்றனர். அப்போது பேசும் ஆரி, ஒருத்தர ஒருத்தர் காப்பாத்தி விளையாண்டுக்றாங்க. அவங்கல்லாம் உள்ள இருக்காங்க. இன்டிவிட்ஜூவலா விளையாடுறவங்கலாம் வெளியே போயிட்டு இருக்காங்க என்று வருத்தப்படுகிறார்.

எதுக்கு விளையாடணும்?

எதுக்கு விளையாடணும்?

அவரை தொடர்ந்து பேசும் அனிதா, என்ன அப்புறம் இது கேம். எதுக்கு விளையாடணும் என விரக்தியாக சொல்கிறார். தொடர்ந்து பேசும் ஆரி, இந்த வாரம் நாமினேஷன்ல 7 பேர். எல்லாருமே ஒரு இடத்துல விளையாடுறவங்க. இன்டிவிட்ஜுவல் கேம், இன்டிவிட்ஜூவல் பிளேயர்ஸ் வெளியே போயிட்டு இருந்தாங்கன்னா.. அந்த குரூப் ஸ்ட்ராங்க் ஆயிட்டே உள்ளே இருந்துச்சுன்னா அவங்களுக்கு போடுறவங்கதான் ஓட்டு போடுவாங்க.

உனக்கும் அதான்

உனக்கும் அதான்

சனம் வெளியே போயிட்டாங்கன்னு நான் அமைதியா உட்காந்திருந்தா நாளைக்கு எனக்கும் அதான் நடக்கும் உனக்கும் அதான் நடக்கும் என்று பேசுகிறார். இதனைக் கேட்கும் பாலாஜி, இதையேதான் 2 வாரத்துக்கு முன்னாடி சொன்னேன் ஹவுஸ்ல பெரிய இம்பேலன்ஸ் வரபோகுதுன்னு என்று தன் பங்குக்கு சொல்கிறார். இப்படியாக உள்ளது இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X