அர்ச்சனாவை சீண்டிய பாலா.. அதைத்தான திங்கிற.. ரவுண்டு கட்டும் ஹவுஸ்மேட்ஸ்.. பரபரக்கும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனல் பறக்கும் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் அனிதா சம்பத் கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுதார்.
அவருடைய அழுகை நடிப்பு என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

அம்மியில அரைக்க விடுறேன்
இதில் பாலாஜி முருகதாஸை ஹவுஸ்மேட்ஸ்கள் வச்சு செய்கின்றனர். புரமோவின்படி அர்ச்சனா அம்மியில் அரைத்தபோது அங்கு சென்ற பாலாஜி அடுத்த வாரம் எல்லோரையும் அம்மியில அரைக்க விடுகிறேன் என்று கூறியதாக தெரிகிறது.

ஆவேசமான அர்ச்சனா
இதனை பெட்ரூமுக்கு கொண்டு வரும் அர்ச்சனா, அங்க வந்து உட்காந்துக்கிட்டு அடுத்த வாரம் எல்லோரையும் அம்மியில அரைக்க விடுகிறேன் என்றார். சொன்னாரா இல்லையா என்று கேளுங்கள் என ஆவேசமாக கூறுகிறார் அர்ச்சனா.

எகிறிய ரியோ
அப்போது ஜூஸ் குடித்துக்கொண்டே பதில் சொல்லும் பாலாஜி, ஆமாம் அடுத்த வாரம் எல்லாரையும் அம்மியில் அரைக்க வைக்கிறேன் என்றேன், இதில் என்ன இருக்கு? என்கிறார். அதற்கு பதில் சொல்லும் ரியோ, எல்லோரையும் அம்மியில அரைக்க விடுறேன் சொன்னா, அப்போ இங்க இருக்கவனுங்கள என்னென்னு நினைச்சுட்டு இருக்கீங்க என்கிறார்.

பனிஷ்மெண்டாம்..
உடனே அறந்தாங்கி நிஷா பொம்பளைங்கள அம்மியில அரைக்க விடுறேன்னு சொன்னா அதுக்கு என்ன அர்த்தம் என கேட்க அதற்கு பனிஷ்மெண்டாம் என்கிறார் அர்ச்சனா. அதற்கு ரியோ மரியாதை முக்கியம் என கூற, நான் எதுவும் மரியாதை குறைவா பேசல என்கிறார் பாலாஜி.

அதைத்தான திங்கிற?
வேல்முருகன் தனது பங்குக்கு எல்லாத்தையும் கேமரா பார்த்துக்கிட்டுதான் இருக்கு என்கிறார். அதற்கும் பதில் கொடுக்கும் பாலாஜி, தோன்றுவதை பேசுவதில் என்ன இருக்கு என்கிறார். அதற்கு அர்ச்சனா, அம்மியில அரைச்ச பிறகுதான் அந்த சோத்த திங்கிற என ஆவேசமாக கேட்கிறார்.

ஏற்கனவே ஏழாம் பொருத்தம்
ஆளாளுக்கு பல முனைகளில் இருந்தும் கேள்விகளை கேட்க முடிந்தவரை அசராமல் பதில் சொல்கிறார் பாலாஜி. இருந்த போதும் இறுதியாக அவரது முகம் மாறிவிட்டது. ஏற்கனவே அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கும் ஏழாம் பொருத்தமாய் உள்ள நிலையில் இன்றைய எபிசோட் களைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











