பத்த வச்சுட்டீயே பரட்ட.. வேட்டியை கொடுத்து வேல்முருகனை அசிங்கப்படுத்திய சுரேஷ்? பகீர் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவே பகீர் கிளப்பியுள்ளது.

Recommended Video

Bigg Boss 4 Tamil • Day 9 | Housemates in Vijay Style • Nomination

பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்பார்த்ததையும் தாண்டி படு பயங்கரமாக சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பாக மூத்த நடிகரான சுரேஷுடன் நாள் தோறும் யாருக்காவது ஒருவருக்கு பஞ்சாயத்து ஏற்பட்டு விடுகிறது.

ரியோ சண்டை

ரியோ சண்டை

நேற்றைய எபிசோடில் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் ரியோ ராஜ் பயங்கர ஆட்டிட்யூட் காட்டினார். அவர் பெரியவர் என்றும் பார்க்காமல் படு ஆவேசமாக பேசினார். தன்னை எடுத்துக்காட்டாய் கூறக்கூடாது என, சுரேஷ் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ளாமலேயே அவரிடம் வம்பிழுத்தார்.

அமைதிகாத்த ஹவுஸ்மேட்ஸ்

அமைதிகாத்த ஹவுஸ்மேட்ஸ்

இதனை பார்த்த நெட்டிசன்கள், ரியோ ராஜை சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்தனர். இப்போதுதான் உன்னுடைய முகத்திரை கிழிகிறது, இதுதான் உன் ஒரிஜினல் முகம் என விளாசினர். ரியோ, சுரேஷை பேசும் போது பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களில் ஒருவர் கூட அவருக்கு நடப்பதை புரிய வைக்க முயற்சிக்கவில்லை.

ஏங்க கேவலமா பேசுறீங்க?

ஏங்க கேவலமா பேசுறீங்க?

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. புரமோவை பார்க்கும் போதே பிபி எகிறுகிறது. புரமோவில் இடம்பெற்றிருப்பதாவது, கிட்சனில் சாப்பாடு எடுத்துக் கொண்டிருக்கிறார் சுரேஷ். அப்போது அங்கு வரும் பாடகர் வேல்முருகன், வேட்டி கொடுத்ததையெல்லாம் ஏங்க கேவலமாக பேசுறீங்க? நான் உங்கக்கிட்ட கேட்டேனா என ஆவேசமடைகிறார்.

ஏன் ஓடுறீங்க?

ஏன் ஓடுறீங்க?

அதற்கு கூலாக, நான் அப்படி சொல்லவில்லை, நீங்கள் காதில் வாங்காவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றப்படியே நகர்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனாலும் அவரை விரட்டும் வேல்முருகன் சொல்லிட்டு போங்க, ஏன் ஓடுறீங்க.. என்கிறார் வேல்முருகன்.

எவ்ளோ அசிங்கப்படுத்துவீங்க?

எவ்ளோ அசிங்கப்படுத்துவீங்க?

நான் நல்லாருக்கு என்றுதான் சொன்னேன் என சுரேஷ் சொல்ல, என்னை எவ்ளோ அசிங்கப்படுத்துவீங்க அந்த வேட்டியை கொடுத்துவிட்டு என்று மல்லுக்கு நிற்கிறார் வேல்முருகன். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சுரேஷ், கூலாக சாப்பிடுகிறார்.

பத்த வச்சுட்டீயே பரட்ட

பத்த வச்சுட்டீயே பரட்ட

மற்ற ஹவுஸ்மேட்கள் அனைவரும் அவர்களின் சண்டையை அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். பின்னர் வேல் முருகனை மட்டும் வாருங்கள் என்று அழைத்து செல்கின்றனர். பின்னர் ஃபைனல் டச்சாக பரட்ட பத்த வச்சுட்டீயே பரட்ட என்றும் பஞ்ச் பேசுகிறார் சுரேஷ்.

எந்த தவறும் இருக்காது

எந்த தவறும் இருக்காது

இந்த புரமோவை பார்க்கும் போதே என்ன நடக்கப் போகிறதோ என பீதியாகிறது. ஆனால் பிக்பாஸை பொருத்தவரை புரமோவில் வரும் எபிசோடில் வேறு ஒன்று இருக்கும். சுரேஷ் சக்கரவர்த்தி இவ்வளவு கூலாக ஹேண்டில் செய்கிறார் என்றால் அவர் மீது எந்த தவறும் இருக்காது என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X