Don't Miss!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ஒரு முடிவோடதான் இருக்காருப்பா இந்த பாலாஜி..நேத்து ஆரி.இன்னைக்கு அர்ச்சனா.ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ரணகள புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீடு கால் செண்டராய் மாறுவது தெரிய வந்தது.
இதில் கால் செண்டர் ஊழியர்களாய் இருக்கும் ஹவுஸ்மேட்டுகளிடம் கஸ்டமர்களாய் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் போன் மூலம் பிரச்சனைகள் குறித்து பேசி தெளிவு பெறுகின்றனர்.
காரசார வாக்குவாதம்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெறுகிறது. லிவிங் ஏரியாவில் மற்ற ஹவுஸ்மேட்ஸ் அமர்ந்திருக்க பாலாஜியும் அர்ச்சனாவும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
என் பேர காலிப்பண்ண
கேபி, நான் உன்னைப் பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை என பாலாஜியிடம் ஆக்ரோஷமாக பேசுகிறார். அதற்கு பதில் சொல்லும் பாலாஜி, ஆக மொத்தம், மொத்தமா சேர்ந்து பழிப் போட்டுக்கிட்டே இருக்கணும். என் பேர காலி பண்ண என்னென்ன அக்யூஸேஷன் வைச்சீங்க.
எவ்ளோ ஃபோர்ஸ் பண்ணீங்க
ஒரு பொண்ணு பேர காட்ட சொல்லி எவ்ளோ ஃபோர்ஸ் பண்ணீங்க.. கேட்டா, அதை நீ காட்ட மாட்டன்னு தெரிஞ்சுதான் கேட்டேன்னு சொன்னீங்க என்று கூறுகிறார். அதற்கு பதில் சொல்லும் அர்ச்சனா, ஆமாம் நீ சொல்ல மாட்டன்னு தெரிஞ்சுதான் சொன்னேன் என்கிறார்.
வெறுப்பேற்றிய அர்ச்சனா
அதற்கு பதில் சொல்லும் பாலாஜி, உன் விளையாட்டு எனக்கு தெரியும் அர்ச்சனா என்கிறார். பாலாஜிக்கு பதில் சொல்லும் அர்ச்சனா, ஓ உனக்கு தெரியுமா? நல்லது.. கடைசியா நீ முழிச்சுக்கிட்ட என்று கூறி வெறுப்பேற்றுகிறார்.
அக்கான்னு சொல்லாத
அர்ச்சனாவுக்கு கேபியை நாமினேட் பண்ணனும் என சோம் சேகரிடம் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார் பாலாஜி. அப்போது குறுக்கிடும் அர்ச்சனா, அக்கான்னு சொல்லாத என் பெயர் அர்ச்சனா, அர்ச்சனான்னு கூப்பிடு என்று கூறுகிறார். அதற்கும் அசராமல் பதில் சொல்லும் பாலாஜி, சரி அர்ச்சனா என்று கூறுகிறார்.
ஒரு முடிவோடதான் இருக்காரு
இப்படியாக உள்ளது இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ. நேற்று ஆரியை வச்சு செய்த பாலாஜி இன்று அர்ச்சனாவை வச்சு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த பாலாஜி ஒரு முடிவோடதான் இருக்காரு போல கருத்து பதிவிட்டு வருகின்றனர்.