போட்டோக்களை போட்டு எரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேற லெவலில் பிக்பாஸ் நாமினேஷன்.. பதற வைக்கும் புரமோ!

சென்னை: இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது வழக்கம்.

ஒரு பக்கம் நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் இருந்த போதும், காரியத்தில் கண்ணாய் இருந்துள்ளார் பிக்பாஸ்.

எஸ்கேப்பான அர்ச்சனா

எஸ்கேப்பான அர்ச்சனா

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது இரண்டாவது புரமோவில் தெரியவந்துள்ளது. அர்ச்சனா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக உள்ளதால் அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்துள்ளார்.

கார்டன் ஏரியாவில் போட்டோ

கார்டன் ஏரியாவில் போட்டோ

பிக்பாஸ் புரமோவின் படி கார்டன் ஏரியாவில் அர்ச்சனா தவிர்த்து எஞ்சிய 15 போட்டியாளர்களின் போட்டோக்கள் 15 பெடஸ்டன்ட்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் தாங்கள் நாமினேட் செய்யும் தலா இரண்டு போட்டியாளர்களின் போட்டோக்களை எடுக்க வேண்டும்.

பாலாஜியை செய்த ரியோ

பாலாஜியை செய்த ரியோ

நாமினேட் செய்வதற்கான காரணத்தை சொல்லி ஹவுஸ்மேட்டுகளின் போட்டோக்களை எடுத்து அருகில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் போட வேண்டும். அதன்படி ரியோ, பாலாஜியை நாமினேட் செய்துள்ளார்.

பாலாஜி போட்டோ எரிப்பு

பாலாஜி போட்டோ எரிப்பு

சந்தோஷமான தருணங்களை பாலாஜி, கஷ்டமான தருணமாக மாற்றுவதாக கூறும் ரியோ, அவரது போட்டோவை நெருப்பில் போட்டு எரிக்கிறார். அவரை தொடர்ந்து பாலாஜி ரியோவை நாமினேட் செய்கிறார்.

அனிதா சம்பத்தும்..

அனிதா சம்பத்தும்..

ரியோ, தன்னை டார்கெட் செய்வதாக கூறி ரியோவின் போட்டோவை நெருப்பில் போட்டு எரிக்கிறார் பாலாஜி. தொடர்ந்து ரம்யா பாண்டியன் சனம் ஷெட்டியை நாமினேட் செய்வதாகவும், கேப்பிரியல்லா அனிதா சம்பத்தை நாமினேட் செய்வதாகவும் உள்ளது.

ரியோ அன்ட் கோ

ரியோ அன்ட் கோ

ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியனையும், அனிதா சம்பத் சம்யுக்தாவையும் நாமினேட் செய்கின்றனர். ஏற்கனவே பாலாஜி மீது ஹவுஸ்மேட்ஸ் கடுப்பில் உள்ளனர். ரியோ அன்ட் கோ அவரை எப்போது வெளியேற்றலாம் என காத்திருக்கிறது.

நாமினேஷனில் வருவார்

நாமினேஷனில் வருவார்

கமிலின் கண் முன்பே ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் சேகர் உள்ளிட்டோர் பாலாஜி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். இதனால் பாலாஜி முருகதாஸ் இம்முறையும் நிச்சயம் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X