பிக்பாஸ் சினேகன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்!
Recommended Video

கவிஞர் சினேகன் தற்போது ஹீரோவாக நடிக்கிறார்
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெகு பிரபலமான கவிஞர் சினேகன் தற்போது இ.வி.கணேஷ் பாபு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்துவரும் படத்திற்கு 'பனங்காட்டு நரி' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கவிஞரும், பாடலாசிரியரான சினேகன், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பயங்கர பாப்புலர் ஆனார். வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த இவர், சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவரை பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்த்தது.

அமீர் இயக்கிய 'யோகி' படத்தின் மூலம் நடிகரான சினேகன், 'உயர்திரு 420' உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு 'பனங்காட்டு நரி' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சினேகன். இந்தப் படத்தை, இ.வி.கணேஷ் பாபு இயக்குகிறார். இவர் 'யமுனா' என்ற பேய்ப்படத்தை இயக்கியவர்.
இதற்கு முன், ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், அப்படங்கள் சினேகனுக்கு பேர் சொல்லும் படங்களாக இல்லை. இ.வி.கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் 'பனங்காட்டு நரி' படத்தின் மூலம், சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்க்கிறார் சினேகன்.


Click it and Unblock the Notifications











