»   »  செம ஹேப்பி... பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் சுஜா!

செம ஹேப்பி... பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் சுஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் இடையே போட்டியாளராகப் பங்குபெற்றவர் மாடல் நடிகை சுஜா வருணி.

பிக்பாஸ் வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என அறியப்பட்ட அவர் சில டாஸ்க்குகளை கடுமையான சவால்களுக்கு மத்தியில் செய்து காட்டினார்.

ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 நிறைவடைவதற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் தனியார் நிகழ்ச்சிகள், படத்தின் ஷூட்டிங்குகள் என பிஸியாக வலம் வருகிறார்கள். இந்நிலையில், நடிகை சுஜா நேற்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்.

தூண்டுகோல்

ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் சுஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நீங்கள் ஒரு தூண்டுகோல்... நீங்கள் உள்ளேயும் வெளியேயும் தைரியமான, அழகான பெண். எப்போதும் புன்னகைத்திருங்கள். வாழ்த்துகள்

தனிமை வேண்டாம்

மகிழ்ச்சியாக நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகள். பிக்பாஸ் நண்பர்களோடு எப்போதும் தொடர்பிலிருங்கள். தனிமையை உணராதீர்கள். இந்த பிறந்தநாள் உங்களுக்கு மறக்க முடியாததாக இருக்கும்.

காமெடியன் சதீஷ்

ஹேப்பி பர்த்டே சுஜா வருணி. இந்த வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என வாழ்த்தியுள்ளார் காமெடி நடிகர் சதீஷ்.

ஓவியா ஆர்மி

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து ஓவியா ரசிகர்கள் சார்பாக வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

பிந்து மாதவி

மிக மகிழ்ச்சியான வாழ்த்துகள் சுஜா. இந்த வருடன் சிறப்பாக அமைய கடவுள் ஆசிர்வதிப்பார்.

உனது நாள்

'உனது நாள், மகிழ்ச்சி, புன்னகை, கொண்டாட்டத்தால் நிரம்பி இருக்கட்டும்... நீடித்த ஆசிர்வாதங்கள் பெறுவாய்' என ஒருவர் வாழ்த்தியுள்ளார்.

English summary
Model actress Suja Varuee participated in the 'Biggboss' show. Some of the Tasks were shown to be in the midst of serious challenges. At the end of Biggboss, actress Suja celebrated her birthday yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil