"தில்லா சொன்னார் தளபதி".. நல்லா கேட்டுக்கங்க.. சொல்வது "பிக்பாஸ்" சுஜா!

By Vignesh Selvaraj

சென்னை : பிக்பாஸ் புகழ் சுஜா வருணி, 'மெர்சல்' படத்தை பார்த்துவிட்டு, 'படத்தை விரும்புகிறேன். சுதந்திரத்தைப் புதைக்கமுடியாது. அடக்க நினைத்தால் பெருகிவிடும்' எனக் கூறியுள்ளார்.

மெர்சல் படத்தின் சில காட்சிகளை நீக்கவேண்டும் என பா.ஜ.க-வினர் மிரட்டியதால் மெர்சல் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்துள்ளது. நடிகர் விஜய்க்கும் படக்குழுவுக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது.

நாடு முழுவதும் 'மெர்சல்' படத்திற்கு ஆதரவுக் குரல் எழுந்திருக்கும் நிலையில், பிக்பாஸ் சுஜா 'மெர்சல்' படத்தின் மீதான தனது விமர்சனத்தை சொல்லியிருக்கிறார்.

தைரியமா சொன்ன விஜய்

நாம் அனைவரும் ஒரு மருத்துவமனைகளில் நடக்கும் கேவலமான செயல்களால் அனுபவப்பட்டிருப்போம்.அந்த வலியை தைரிமாக அட்லியும் நம்முடைய தளபதியும் சொல்லியிருக்கிறார்கள். மெர்சல் படத்தை விரும்புகிறேன். ஒரு கலைஞனை, மக்கள் சுதந்திரத்தை புதைக்கமுடியாது. அடக்க நினைத்தால் மக்கள் அப்போது மில்லியனாக பெருகிவிடுவார்கள் என கூறியுள்ளார்.

சொன்னாலே திமிரேறும்

சொன்னாலே திமிரேறும்

'தமிழனா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்... தமிழ்ப் பெண்ணாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார் சுஜா.

டயாலாக் வேணும்

நல்லா சொன்னீங்க. ஆனா, மெர்சல் படக்குழு பி.ஜே.பிக்கு பணிஞ்சு போறது, டயலாக்கை ம்யூட் பண்றது உண்மையிலேயே கவலையா இருக்கு. அந்த டயலாக்குகளை கேட்க ஆவலோடு இருக்கிறேன்.

பி.ஜே.பிக்கு எதிராக

சூப்பர் சுஜா. தளபதிக்கு ஆதரவாகவும், பி.ஜே.பிக்கு எதிராகவும் கருத்து சொல்லியதற்காக நன்றி. உங்கள் ட்வீட்டால் நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X