கமலுக்காக தீயாய் வேலை செய்யும் பிக்பாஸ் பிரபலம்.. கையில் டார்ச்சுடன் தெரு தெருவாய் தீவிர பிரசாரம்!

சென்னை: நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பிக்பாஸ் சீசன் 4 பிரபலம் ஒரு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் போட்டோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 16 போட்டியளார்கள் நிகழ்ச்சியின் முதல் நாளிலும் எஞ்சிய 2 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சக்ஸ் கிட்சன்

சக்ஸ் கிட்சன்

அவர்களில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமையல் கலைஞரான சுரேஷ் சக்கரவர்த்தி சக்ஸ் கிட்சன் என்ற சமையல் நிகழ்ச்சிக்கான யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

பிரபலமான தாத்தா

பிரபலமான தாத்தா

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி பங்கேற்ற பல இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடினார். இதனால் தாத்தா தாத்தா என சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமானார்.

மேடையில் போட்டுடைத்த சுரேஷ்

மேடையில் போட்டுடைத்த சுரேஷ்

பிக்பாஸ் வீட்டுக்குள் என்டர் ஆகும் போதே கமலை தனக்கு எவ்வளவு பிடிக்கும், கமல் மீது தான் எவ்வளவு மரியாதை வைத்துள்ளேன் என்பதை தெளிவாக கமலிடமே மேடையில் போட்டுடைத்தார் சுரேஷ் சக்கரவர்த்தி.

ஃபினாலே நிகழ்ச்சியில்

ஃபினாலே நிகழ்ச்சியில்

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போதும் கமலிடம் தனக்குள்ள மரியாதையை வெளிப்படுத்திவிட்டுதான் சென்றார். பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி கமலுடன் பிரசாரத்தில் பங்கேற்ற அனுபவங்களை பகிர்ந்தார்.

வரும் 6ஆம் தேதி தேர்தல்

வரும் 6ஆம் தேதி தேர்தல்

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவாக நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பிரசாரம் செய்து வருகிறார். வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது.

சினிமா நட்சத்திரங்கள்

சினிமா நட்சத்திரங்கள்


இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கு பிடித்தகட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

கையில் டார்ச்சுடன்

கையில் டார்ச்சுடன்

அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தியும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கழுத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துண்டு, கையில் டார்ச் லைட் என பெண்களிடம் சுரேஷ் சக்கரவர்த்தி வாக்கு சேகரிக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஓகே தாத்தா போட்ருவோம்

ஓகே தாத்தா போட்ருவோம்

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஓகே தாத்தா போட்ருவோம் ஓட்ட டார்ச் லைட்டுக்கே என பதிவிட்டு வருகின்றனர். மேலு சில நெட்டிசன்கள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக நீங்கள் பிரசாரம் செய்வது மகிழ்ச்சி என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X