ப்பா.. வெஸ்டர்ன் டான்ஸரை போல் ஆட்டம் போடும் சுரேஷ் தாத்தா.. வைரலாகும் வீடியோ!
சென்னை: பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானவர் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி. தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ள சுரேஷ் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சமையல் கலை வல்லுநரான சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சக்ஸ் கிச்சன் என்ற யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் மூத்தவர்
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே வயதில் மூத்தவராக இருந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி.

கேபியை தோளில் சுமந்து
ஆனால் இளம் போட்டியாளர்கள் பலருக்கும் செம டஃப் கொடுத்தார். ஒவ்வொரு டாஸ்க்கையும் என்ஜாய் செய்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. அதிலும் குறிப்பாய் கேபியை கேப்டனாக்க அவரை தோளில் சுமந்து கொண்டு நின்றது வேற லெவலில் ரசிக்கப்பட்டது.

சுரேஷ் தாத்தா
அதன் பிறகு சுரேஷ் தாத்தா என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு சமூக வலைதளங்களில் செம ஆக்ட்டிவ் ஆகிவிட்டார். அவ்வப்போது தனது வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.
ஆர் யூ ரெடி?
அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது ஷேர் செய்துள்ள வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதாவது ஆர் யூ ரெடி? என்ற கேப்ஷனுடன் இசைக்கு ஏற்ப புருவம், கண்கள், வாய் என அசைத்து அட்டகாசமான பர்ஃபாமன்ஸ் கொடுத்துள்ளார் சுரேஷ்.

பிக்பாஸ் ஜோடிகள்
இதனை பார்த்த ரசிகர்கள், தாத்தா சூப்பர், வேற லெவல் என பாராட்டி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. சுரேஷ் சக்கரவர்த்தி கிளாசிக்கல் டான்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications