பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய நபர் இவர்தான்.. சின்னப்பொண்ணு இல்லையாம்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் முன் எப்போதும் இல்லாத அளவாக முதல் நாளே 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர்.

17 போட்டியாளர்கள்

17 போட்டியாளர்கள்

இதில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து 17 போட்டியாளர்களுடன் போட்டி நடைபெற்று வந்தது. கடந்த வாரம் போட்டியாளர்களின் முதல் வாரம் என்பதால் எவிக்ஷன் புராசஸ் நடைபெறவில்லை.

லிஸ்ட்டில் 15 போட்டியாளர்கள்

லிஸ்ட்டில் 15 போட்டியாளர்கள்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் முதல் நாமினேஷன் புராசஸ் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் பாவனி ரெட்டி, மற்றும் வீட்டின் கேப்டனான தாமரை செல்வியை தவிர மற்ற 15 போட்டியாளர்களும் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.

ஞாயிற்றுக் கிழமை வெளியாகும்

ஞாயிற்றுக் கிழமை வெளியாகும்

இதில் வாக்குகளின் அடிப்படையில் சின்னப்பொண்ணு, மதுமிதா, அபிஷேக், நாடியா சங், வருண் ஆகியோர் டேஞ்சர் ஸோனில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளரின் பெயரை அறிவிப்பார்.

சனிக்கிழமையே கசிந்து விடும்

சனிக்கிழமையே கசிந்து விடும்

ஆனால் சனிக்கிழமையே ஞாயிற்றுக் கிழமைக்கான எபிசோடும் காட்சியாக்கப்படும் என்பதால் சனிக்கிழமையே எவிக்ஷன் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்து விடும். அந்த வகையில் சனிக்கிழமையான இன்றைய எபிசோடில், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, ஸ்ருதி, அக்ஷரா ரெட்டி, ராஜு, அபினய், ஐக்கி பெரி, மதுமிதா, நிருப், வருண் ஆகிய 10 போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்டதாக தகவல் பரவியது.

யார் வெளியேறுபவர்?

யார் வெளியேறுபவர்?

மேலும் அபிஷேக், சின்னப்பொண்ணு, மதுமிதா, நாடியா சங், ஆகியோர் சனிக்கிழமை எபிசோடில் காப்பாற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேறுபவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நாடியா சங் எவிக்ட்டட்?

நாடியா சங் எவிக்ட்டட்?

அதன்படி மலேசிய மாடலான நாடியா சங் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையானதா என்பது நாளைய எபிசோடில் தெரிந்துவிடும். வழக்கமாக இதுவரை பிக்பாஸ் சீசன்களில் வயதான போட்டியாளர்களைதான் முதலில் வெளியேற்றுவார்கள்.

கன்டென்ட் கொடுக்கவில்லை

கன்டென்ட் கொடுக்கவில்லை

அதனால் இந்த வாரம் சின்னப்பொண்ணு தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என கூறப்பட்டது. சமூக வலைதளங்களிலும் அந்த தகவலே பரவி வந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாடியா சங் வெளியேறியுள்ளார். நாடியா சங், பிக்பாஸ் வீட்டில் இருந்த கடந்த 2 வாரங்களில் பெரிதாக எந்த கன்டென்ட்டும் கொடுக்கவில்லை. இதன்காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X