பிக் பாஸ் 4: நலமா.. வேலைய ஆரம்பிக்கலாமா.. கையில் காபி கப்புடன் வந்த கமல்..வெளியானது பிக்பாஸ் டீசர்!

சென்னை: சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டீசர் வெளியாகியுள்ளது.

Recommended Video

Shivani -ன் Charming Dance | Rettai Roja, Pagal Nilavu

இந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த மொழியை சேர்ந்த திரைத்துறை உச்ச நட்சத்திரங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

லாக்டவுன்

லாக்டவுன்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது. வழக்கமாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும். ஆனால் இம்முறை கொரோனா பீதி மற்றும் லாக்டவுன் காரணமாக இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படமால் இருந்தது.

கமல் போட்டோ ஷுட்

கமல் போட்டோ ஷுட்

இருப்பினும் அதுதொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது. கடந்த மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கி கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார். இதுதொடர்பான போட்டோ ஷுட் அண்மையில் நடைபெற்றதாக தகவல் வெளியானது.

விஜய் டிவி அறிவிப்பு

விஜய் டிவி அறிவிப்பு

கமல் தாடியுடன் இருக்கும் புது கெட்டப் போட்டோவும் வைரலானது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோவும் தயாராகிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு உள்ளதாக விஜய் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தது.

காப்பி கப்புடன் கமல்

காப்பி கப்புடன் கமல்

இதனால் அதனை காண ஆர்வமாக காத்திருந்தனர் ரசிகர்கள். சொன்னப்படியே சரியாக 8 மணிக்கு விஜய் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டீசர் வெளியானது. அதில் முகத்தில் தாடி கையில் காப்பி கப் என கெத்தாக வந்த கமல் நலமா என்று கேட்டு உலகையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா குறித்து பேசினார்.
மருந்தே கண்டுபிடிக்கப்படாத ஒரு நோய். இந்த உலகம் ஒரு கிராமம் என உணர்த்தியிருக்கிறது.

ஜாக்கிரதையாக..

ஜாக்கிரதையாக..

அமேஸானில் தீப்பிடித்தால் இங்கு ஆக்ஸிஜன் குறைகிறது. நீங்களும் நானும் வேலைக்கு போகாவிட்டால் சங்கிலித்தொடராக நம்மை நம்பியிருக்கும் பலர் 5 மாதங்களாக வேலையில்லாமல் இருக்கிறார்கள். நோய் ஆபத்தானதுதான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதற்காக வேலையில்லாமல் இருக்க முடியாது.

வேலைய ஆரம்பிக்கலாமா..

வேலைய ஆரம்பிக்கலாமா..

உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளப்படி பாதுகாப்பாய் இருப்போம். இதோ நான் வந்துவிட்டேன். நீங்களும் உங்களின் வேலையை தொடங்குங்கள். நம்மை நம்பியிருப்பவர்களை வாழ வையுங்கள். நாமே முன்னெடுப்போம் புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை.. புதிய வாழ்க்கையை எனக்கூறி வேலைய ஆரம்பிக்கலாமா என்று கேட்கிறார். பின்னர் என்ன வேலை என்று கேட்டப்படியே கண்களை காட்டி மற்றவர்களை கவனிப்பதை.. என்ற சைகையுடன் முடித்துள்ளார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X