அப்போ.. இந்த வாரம் இவர்தான் வெளியேறப்போவதா? நாமினேஷனில் இடம் பிடித்த அந்த 7 பேர்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் புராசஸில் 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் புராசஸ் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் தலா இரண்டு போட்டியாளர்கள் அல்லது மூன்று போட்டியாளர்களை ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் நாமினேட் செய்ய வேண்டும்.
அதன்படி இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் புராசஸில் ஒவ்வொரு போட்டியாளரும் தலா மூன்று பேரை நாமினேட் செய்தனர். பாவனி பிக்பாஸ் வீட்டின் கேப்டன் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது.

முதல் முறையாக..
இதனை தொடர்ந்து நடைபெற்ற நாமினேஷன் புராசஸில் 7 பேர் இடம் பிடித்தனர். அதன்படி அபினய், இமான் அண்ணாச்சி, அமீர், நிரூப், அக்ஷரா, தாமரை, சிபி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். தனது நண்பன் நண்பன் என கூறி வந்த பிரியங்கா முதல் முறையாக நிரூப்பை நாமினேட் செய்தார்.

காப்பாற்றி கொள்கிறீர்களா?
கண்ணீருடன் நிரூப் குறித்து பேசி விட்டு அவரை நாமினேட் செய்தார் பிரியங்கா. இறுதியாக நாமினேஷன் லிஸ்ட்டை வாசித்த பிக்பாஸ், நிரூப்பிடம் இருக்கும் காயினை பயன்படுத்தி எவிக்ஷனுக்கான புராசஸில் இருந்து காப்பாற்றி கொள்கிறீர்களா என்று கேட்டார்.

சஞ்சீவை அழைத்த நிரூப்
அதற்கு சரி என்றார் நிரூப். இதனைக் கேட்ட பிக்பாஸ் யாரை மாற்ற விரும்புகிறீர்கள் என்றார். அதற்கு வைல்டு கார்டு என்ட்ரியான சஞ்சீவ்வின் பெயரை கூறினார் நிரூப். இதனை தொடர்ந்து இருவருக்கும் போட்டி வைத்தார் பிக்பாஸ். இதில் யார் தோற்பவர் நாமினேஷனில் இடம் பெறுவார் என்று அறிவித்தார் பிக்பாஸ்.

தப்பித்த சஞ்சீவ்
இதையடுத்து கார்டன் ஏரியாவில் இருவருக்கும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நிரூப் தோல்வியை தழுவினார். சஞ்சீவ் வெற்றி பெற்றார். இதனால் எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷனில் இருந்து தப்பித்தார் சஞ்சீவ். நிரூப் நாமினேஷனில் தொடர்ந்து இடம் பிடித்தார்.

ஸ்கெட்ச் போட்ட பிக்பாஸ்
இந்நிலையில் இந்த வார நாமினேஷன் புராசஸில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்களை பார்த்த நெட்டிசன்கள், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அபினய்தான் வெளியேற்றப்படுவார் என கூறி வருகின்றனர். அதே நேரத்தில் இந்த வாரம் பிரியங்காவுக்காக நிரூப்பை வெளியேற்ற பிக்பாஸ் ஸ்கெட்ச் போட்டு விட்டதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











