இந்த வார நாமினேஷனில் இடம்பிடித்தவர்கள் இவர்கள்தான்.. வெளியேறப்போவது யார்?
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்ஷன் புராசஸிற்காக 9 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 20 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை 2 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை நாமினேஷன் புராசஸ் நடைபெற்று வருகிறது. முதல் நாமினேஷனில் 15 போட்டியாளர்கள் இடம் பெற்றனர்.

இரண்டாவது எவிக்ஷன்
அவர்களில் இருந்து மலேசிய மாடலான நாடியா சங் நாமினேட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இரண்டாவது நாமினேஷன் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் 9 போட்டியாளர்கள் எவிக்ஷன் புராசஸிற்கு நாமினேட் ஆயினர். அவர்களில் இருந்து அபிஷேக் ராஜா நேற்று வெளியேற்றப்பட்டார்.

எரியும் நெருப்பில்..
இந்நிலையில் இன்று திங்கள் கிழமை என்பதால் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. வழக்கமாக கன்ஃபெஷன் ரூம்மில் நடைபெறும் நாமினேஷன் இந்த வாரம் ஆக்டிவிட்டி ஏரியாவில் நடைபெற்றது. இதில் அங்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் நாமினேஷன் செய்யப்படும் நபர்களின் படங்களை போட்டு எரிக்க வேண்டும்.

நாமினேஷனில் 9 போட்டியாளர்கள்
அதன்படி போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் தொடர வேண்டாம் என்று நினைக்கும் போட்டியாளர்களை நாமினேட் செய்தனர். இதில் இந்த வாரமும் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர். அதன்படி சின்னப்பொண்ணு, பாவனி, அக்ஷரா ரெட்டி, இசைவாணி, ஸ்ருதி, அபினய், இமான் அண்ணாச்சி, வருண், பிரியங்கா ஆகியோர் நாமினேஷனில் இடம் பிடித்துள்ளனர்.

வழங்கப்பட்ட சலுகைகள்
நாமினேஷன் லிஸ்ட்டை அறிவித்த பிக்பாஸ் பஞ்ச தந்திர காயின்களை வைத்துள்ள பாவனி, வருண், இசைவாணி ஆகியோரை அந்த காயின்களை பயன்படுத்தி தங்களுக்கு பதிலாக வேறு யாரையாவது நாமினேட் செய்யலாம் சலுகை கொடுத்தார். ஆனால் அவர்கள் மூன்று பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்த விரும்பவில்லை என கூறி விட்டனர்.

வெளியேற்றப்பட்ட அபிஷேக்
இதனைத் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்ட 9 பேரும் எவிக்ஷன் புராசஸிற்கான லிஸ்ட்டில் உள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷன் புராசஸில் கடைசி இருவராக சின்னப் பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோர் வந்தனர். அவர்களில் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கன்டென்ட் இல்லை
இந்நிலையில் இந்த வாரமும் சின்னப்பொண்ணு நாமினேஷனில் இடம் பிடித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக குறைந்த வாக்குகளை வாங்கி ஜஸ்ட்டில் மிஸ்ஸாகி வருகிறார் சின்னப் பொண்ணு. சின்னப் பொண்ணு பெரிதாக கன்டென்ட் ஒன்றும் கொடுக்கவில்லை. மேலும் இதுவரை முடிந்த சீசன்களில் வயதான போட்டியாளர்கள் முதலில் வெளியேற்றப்பட்டு வந்தனர்.

தப்பிய சின்னப்பொண்ணு
இதனால் அவர் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அவரை விடவும் குறைவாக கன்டென்ட் கொடுத்த நாடியா சங் முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது வாரத்தில் அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டார். இதனால் சின்னப் பொண்ணு எவிக்ஷனில் இருந்து தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











