பொதுவாக கேட்ட தாமரை.. வார்த்தையை விட்டு.. அடிப்பது போல் எகிறிய அபினய்.. அல்லோகளப்பட்ட பிக்பாஸ் வீடு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் வெற்றி கொடிக்கட்டு டாஸ்க்கின் போது அபினய் தாமரை செல்வியிடம் எகிறியதால் பிக்பாஸ் வீடே பெரும் களேபரமானது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் மாநாடு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ் மூன்று கட்சிகளாக பிரிந்துள்ளனர்.
என்பிபி கட்சியின் தலைவராக சஞ்சீவ்வும் பிபி மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவராக சிபியும், உரக்க சொல் கட்சியின் தலைவராக பிரியங்காவும் உள்ளனர்.

வெற்றிக் கொடி கட்டு டாஸ்க்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வெற்றி கொடிக்கட்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்காக கார்டன் ஏரியாவில் ஏராளமான கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் எந்த கட்சி அதிக கொடி கம்பங்களில் தங்களின் கொடியை அதிகம் நடுகிறதோ அந்த கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

உரக்க சொல் கட்சியினர்
இதனை தொடர்ந்து பஸர் அடித்ததும் மூன்று கட்சியினரும் கொடி கம்பங்களை சேகரிக்க முயன்றனர். இதில் பிரியங்காவின் உரக்க சொல் கட்சியினர் யாரையும் எடுக்க விடாமல் அதிக கொடிக் கம்பங்களை எடுத்து சேகரித்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த கொடி கம்பங்களை பிடுங்கும் பணியில் இறங்கினர்.

மூடிட்டுப் போ..
இதனால் மூன்று அணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை பார்த்த தாமரை செல்வி ஏன்ப்பா இப்படி விளையாடுறீங்க என்று பொதுவாக கேட்டார். இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்ட அபினய், தாமரையிடம் கடுமையாக கத்தினார். மூடிட்டு போ என வார்த்தையை விட்ட அபினய், என்ன என்ன என கேட்டு அடிப்பது போல் எகிறினார்.

கடும் வாக்குவாதம்
இதனால் அதிர்ச்சியான தாமரை நான் என்ன உங்களையா தனிப்பட்ட முறையில் கேட்டேன்? நான் எல்லோரையும் சேர்த்து பொதுவாகதான் கேட்டேன் என தனது நியாயத்தை விளக்கினார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத அபினய், அதை நிரூப்பிடம் கேள் வருணிடம் கேள் என ஆக்ரோஷமாக பேசினார். இதனால் அபினய்க்கும் தாமரை செல்விக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அல்லோகளப்பட்டது பிக்பாஸ் வீடு
மொத்த ஹவுஸ்மேட்டும் தாமரை செல்வி பொதுவாகதான் கேட்டார் என கூறியும் உரக்கச் சொல் டீம்மை சேர்ந்த பிரியங்கா, பாவனி, அபினய் மற்றும் அமீர் அதை காதில் வாங்க வில்லை. அபினய்யும் தாமரையும் மாறி மாறி கத்தியதால் பிக்பாஸ் வீடு அல்லோகளப்பட்டது.


Click it and Unblock the Notifications











