வசி.. அபினய்க்கு கோபம் வருது வசி... கத்தியை கேட்டவர்களிடம் கத்திய ஜெமினி பேரன்..பாவனிக்கிட்ட பம்முனீங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் கத்தியை கேட்ட சின்னப்பொண்ணு மற்றும் தாமரை செல்வியிடம் கோபப்பட்டார் அபினய்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அபினய். ராமானுஜர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
அபினய், நடிகையர் திலகம் சாவித்திரி மற்றும் ஜெமினி கணேசனின் பேரன் ஆவார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதலே இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார்.

அபினய்யுடன் சண்டை
நிகழ்ச்சி தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே பாவனி, அபினயுடன் நெருக்கமாக முயற்சித்தார். ஆனால் அபினய் தனக்கு எந்த எண்ணமும் இல்லை என்று கூறி விலகி விட்டார். அதன்பிறகு அபினய், வருணை பற்றி தன்னிடம் தப்பு தப்பாக பேசியதாக கூறி அவரிடம் சண்டை போட்டார்.

புரியாதது போல்..
அப்போது வாயே திறக்காமல் இருந்தார் அபினய். பாவனி அவ்வளவு மோசமாக கத்தி சண்டை போட்ட போதும் ஒன்றுமே புரியாதது போல் வாட் வாட் என்றே கேட்டுக் கொண்டிருந்தார். அப்படியே பேசினாலும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசுவதால் அவருடைய பேச்சை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை.

பருப்பு வெந்து விட்டது
இதனால் பெரும்பாலான ரசிகர்கள் அபினய் இருக்கிறாரா இல்லையா என்றே கேட்டு வந்தனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் டைனிங் ஏரியாவில் அமர்ந்து சாப்பிட பழங்களை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது பருப்பு வெந்து விட்டது காய்களை வெட்ட வேண்டும் கத்தியை கொடுங்கள் என சின்னப்பொண்ணும் தாமரை செல்வியும் கேட்டனர்.

கத்தியை தூக்கி எறிந்தார்
இதனால் கடுப்பான அபினய், வெட்டி முடித்தால் தரமாட்டேனா என்று கேட்டு கோபத்தில் கத்தியை தூக்கி எறிந்தார். இதனை பார்த்த சின்னப்பொண்ணு என்னப்பா கோபத்தில் தூக்கி எறிகிறீர்களா என கேட்டார் அதற்கு பதிலே சொல்லாமல் சென்ற அபினய் பின்னர், 10 முறை கேட்டுவிட்டீர்கள்.. இரிட்டேட் ஆகாதா என எரிச்சலானார்.

சண்டை போட வேண்டுமா
அதோடு நீங்கள் கிட்சன் டீம் இல்லையே, கிட்சன் டீமை வர சொல்லுங்கள் என்று கூறினார். தொடர்ந்து கோபத்தில் பேசிக் கொண்டிருந்தவரிடம் என்னிடம் சண்டை போட வேண்டுமா அண்ணா என்று கேட்டார். அதற்கு சண்டை போட வேண்டும் என்றால் கடைசி ஆளாக நான்தான் இருப்பேன் என்றார். அபினய் கோபப்பட்டதை பார்த்த நெட்டிசன்கள் அபினய்க்கு கோபமெல்லாம் வருகிறதே என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











