ஆடிஷனில் பாட்டி சாவித்திரி பெயரை சொன்னதால் பளார் விட்ட இயக்குநர்.. அபினய் சொன்ன உருக்கமான கதை!

சென்னை: ஆடிஷனில் பாட்டி சாவித்திரியின் பெயரை சொன்னதால் பளார் என இயக்குநர் அறைவிட்டதாக தனது கடந்த காலத்தில் சந்தித்த அனுபவங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டார் அபினய்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அபினய் வட்டி. இவர் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் நடிகையர் திலகம் சாவித்திரியின் பேரன் ஆவார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்து சக ஹவுஸ்மேட்டுகளிடம் அதிகம் பேசாமல் இருந்து வருகிறார் அபினய். இதனால் அபினய் என்ன பேசப் போகிறார்? என அவரை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர் ரசிகர்களும் பார்வையாளர்களும்.

ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரன்

ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரன்

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் நடிகர் அபினய் வட்டி தனது கதையை பகிர்ந்து கொண்டார். தான் ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அபினய் தனது சிறு வயது முதல் தற்போது வரை தான் வளர்ந்த விதத்தை சுவாரசியமாக கூறினார்.

பாட்டி இறந்த பிறகு பெரும் கஷ்டம்

பாட்டி இறந்த பிறகு பெரும் கஷ்டம்

தாத்தாவும் பாட்டியும் பிரிந்த பிறகு பாட்டி தப்பான ஒரு விஷயத்துக்கு அடிமையாகி கொஞ்ச வருடங்களில் இறந்துவிட்டார். இதனால் சிறுவயதில் இருந்தே குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தது. கஷ்டத்தை மட்டும்தான் பார்த்து வளர்ந்தேன். தாத்தாவுடன் நிறைய நேரம் செலவழித்திருக்கிறேன் என்றார்.

எனக்காக என் மனைவி கஷ்டப்பட்டார்

எனக்காக என் மனைவி கஷ்டப்பட்டார்

பின்னர் தனது மனைவி குறித்து பேசிய அபினய், காதலை சொல்லி உடனடியாக திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய மனைவிதான் தனக்கு பெரும் ஆதரவு என்றார். மெச்சூரிட்டியாக இருப்பார். திருமணத்திற்கு பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது மேலே படிக்க சொன்னார். மேற்படிப்புக்காக லண்டன் சென்றோம். நான் எம்எஸ் படித்தேன். எனக்காக என் மனைவி வேலை பார்த்தார்.

சினிமாவில் நடிக்குமாறு கூறினார்

சினிமாவில் நடிக்குமாறு கூறினார்

அந்த குளிரில் காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து அவர் வேலைக்கு செல்வார். நான் கல்லூரிக்கு போவேன். படிப்பு முடிந்தது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்தோம். என் மனைவி கேட்டார். சினிமாவில் உங்கள் தாத்தா பாட்டிக்கு பிறகு உங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் இல்லை தானே நீங்கள் ட்ரை பண்ணுங்கள் என்றார்.

எனக்கு தாழ்வு மனப்பான்மை

எனக்கு தாழ்வு மனப்பான்மை

பிறகு லண்டனில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் இந்தியா வந்தோம். பல ஆடிஷன்களில் பங்கேற்றேன். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு கூச்ச சுபாவம் அதிகமாக இருந்தது. இதனால் என்னையே நான் சந்தேகப்பட்டேன். நாம் எதுக்கும் சரி வரமாட்டோமோ என்று எனக்குள்ளேயே தாழ்வு மனப்பான்மை வந்தது.

பாட்டி பெயரை சொன்னதும் பளார் விட்டார்

பாட்டி பெயரை சொன்னதும் பளார் விட்டார்

ஒரு பிரபல இயக்குநர் தாசரி நாராயணன், தனது படத்திற்கு ஆடிஷனுக்கு சென்றேன். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த ஆடிஷனில் கடைசி 5 பேரில் ஒரு ஆளாக பங்கேற்றேன். ஆடிஷனில் எனக்கு சரியாக வரவில்லை. பின்னர் அந்த இயக்குநரிடம் நான் சாவித்திரி அம்மாவின் பேரன் என்று கூறினேன். கேட்டதும் என்னை பளார் என அறைந்தார்.

நீதான் லீட் ரோல் பண்ற என்றார்

நீதான் லீட் ரோல் பண்ற என்றார்


அப்போதுதான் இதை சொல்லக்கூடாதோ? தெரியாமல் சொல்லிவிட்டேனோ என்று அதிர்ச்சியானேன். பின்னர் பேசிய அந்த இயக்குநர், நீதான் லீட் ரோல் பண்ற என்று கூறி அவர் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றார். அங்கு என் பாட்டியின் போட்டோவை அவ்வளவு பெரிய ஃபிரேம்மாக மாட்டி வைத்திருந்தார்.

வாரி கொடுத்தார் பாட்டி

வாரி கொடுத்தார் பாட்டி

அப்போதுதான் எனக்கு தெரிந்தது அவர் என் பாட்டி மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்று. என் பாட்டி பலருக்கும் உதவி செய்தார்கள். பாட்டி வீட்டில் எப்போதும் இரண்டு ஆச்சாரிகள் இருந்தனர். என்ன டிசைன் நகை யார் கேட்டாலும் பாட்டி அந்த ஆச்சாரிகளை வைத்து கேட்பவருக்கு செய்து கொடுப்பாராம். இருக்கும்போது எல்லோருக்கும் அள்ளி கொடுத்தார்.

வேறு யாருக்காவது மனைவியாக இருந்திருக்கலாம்

வேறு யாருக்காவது மனைவியாக இருந்திருக்கலாம்

ஆனால் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தி கொள்கிறேனா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. இதை பார்த்தும் என் மனைவி கழுவி ஊற்றுவார். என்னுடைய முதல் விமர்சகர் என் மனைவிதான். அவர் எனக்கு மனைவியாக இல்லாமல் வேறு யாருக்காவது மனைவியாக இருந்திருந்தால் அவருடைய வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்.

சிறந்த அப்பாவாக இருக்க வேண்டும்

சிறந்த அப்பாவாக இருக்க வேண்டும்

நான் சிறந்த கணவனா என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் சிறந்த அப்பாவாக இருக்க வேண்டும். எனக்கு இப்போது 3 அம்மாக்கள் இருக்கிறார்கள். என் அம்மா, என் மனைவி, என் மகள். எனக்காக எதையும் செய்வார்கள். உங்களுக்கு என்னை பற்றி ஏதாவது தெரிய வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள். இங்கு இருக்கும் என்னை பாருங்கள். முன்பே கேட்டதை வைத்து எதையும் தீர்மானிக்காதீர்கள்.. இங்கு வந்ததன் மூலம் நான் இழந்த வாய்ப்புகள் எனக்கு மீண்டும் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.. என்று கண்ணீர் மல்க கூறினார் அபினய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X