அக்ஷராவ உன்கிட்டேருந்து பிரிக்க 2 நிமிஷம் ஆகாது... மொத்த திமிரையும் காட்டும் அபிஷேக்.. புதிய புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பஞ்ச தந்திர டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இதில் விலை மதிக்க முடியாத 5 நாணயங்கள் கொடுக்கப்பட்டது.

ஜெயிலுக்கு போன நிரூப்

ஜெயிலுக்கு போன நிரூப்

அந்த நாணயங்களை கைப்பற்றும் போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம். ஆகையால் நாமினேட் ஆன போட்டியாளர்கள் மட்டுமின்றி மற்ற போட்டியாளர்களும் நாணயத்தை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். நேற்றைய எபிசோடில் இந்த பிக்பாஸ் சீசனின் முதல் நபராக நிரூப் ஜெயிலுக்குள் அனுப்பப்பட்டார்.

 முதல் புரமோ

முதல் புரமோ

நேற்றைய எபிசோடும் வழக்கம் போல சலசலப்பு கண்ணீர் காஸிப் என சென்றது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பெட்ரூம்மில் அமர்ந்து அபிஷேக், பிரியங்கா, ராஜு, நிரூப், அபினய், சிபி, இமான் அண்ணாச்சி ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

2 நிமிஷம் கூட ஆகாது

2 நிமிஷம் கூட ஆகாது

அப்போது அக்ஷராவை உன்னிடம் இருந்து பிரிக்க எனக்கு 2 நிமிடம் கூட ஆகாது என ராஜுவிடம் பேசுகிறார் அபிஷேக். தொடர்ந்து பிரியங்காவிடம் பேசும் ராஜு, பார்த்ததுமே கிடைக்கிற மாதிரி இடத்துல கொடுக்க இது என்ன பாரத விலாஸா? இது பிக்பாஸ் வீடு.. உங்க கூட இருக்கவங்களே உங்களை செஞ்சுக்கிட்டு இருக்காங்க என்கிறார்.

எனக்கு அட்டேன்ஷன் தேவை

எனக்கு அட்டேன்ஷன் தேவை

அப்போது குறுக்கிடும் அபிஷேக் நான்தான் செய்றேன் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். மேலும் எனக்கு அட்டேன்ஷன் தேவை.. ரொம்ப சிம்பிள்.. இவளோட ஒத்துப்போனாதான் என் மூஞ்சு டிவில வரும்னா நான் பண்றேன்னு சொல்றேன் என்கிறார்.

முகம் சுளிக்க வைக்கும் அபிஷேக்

முகம் சுளிக்க வைக்கும் அபிஷேக்

அப்போது பேசும் அண்ணாச்சி, இவங்கக்கூட சேர்ந்தா தான் உன் மூஞ்சிய டிவியில் காட்டுவாங்களா என அபிஷேக்கை கேட்க, அதற்கு உங்களோட வாக்குவாதம் வச்சுக்கிட்டாதான் என் மூஞ்சு டிவில வரும் என்று பதில் கூறுகிறார் அபிஷேக். அதற்கு இது ரொம்ப கேவலமா இருக்கு என அண்ணாச்சி கூற, அப்படியே வச்சுக்கோங்க என இமான் அண்ணாச்சியின் வயசுக்கு கூட மரியாதை கொடுக்காமல் மொத்த திமிரையும் காட்டி முகம் சுளிக்க வைக்கிறார் அபிஷேக்.

மதிக்காத அபிஷேக்

மதிக்காத அபிஷேக்

அபிஷேக் பேசுவதையெல்லாம் பக்கத்தில் படுத்தப்படியே மிரட்சியுடன் பார்க்கிறார் சிபி. அபிஷேக் அனைத்து போட்டியாளர்களையும் டிவிஸ்ட் செய்து விளையாடி வருகிறார். யாரையும் சொந்தமாக விளையாட விடாமல் ஒவ்வொருவராக இன்ஃபுளுயன்ஸ் செய்து வரும் அபிஷேக், சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, தாமரை என வயதில் மூத்தவர்களை கூட மதிப்பதில்லை.

முதலில் வெளியேற்றுங்கள்

முதலில் வெளியேற்றுங்கள்

அபிஷேக்கின் நடவடிக்கையால் அவர் மீதான வெறுப்பு பார்வையாளர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எரிச்சலாகும் நெட்டிசன்ஸ் முதலில் அபிஷேக்கை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X