உன் கூட வேற லெவல்ல கனெக்ட் ஆயிட்டேன்.. மதுமிதாவுக்கு ரூட்டு போடும் அபிஷேக்?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிஷேக் மதுமிதா விஷயத்தில் காட்டும் ஆர்வத்தை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ரூட் போடுகிறாரா என கேட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா. ஃபேஷன் டிஸைனரான மதுமிதா ஜெர்மனியை சேர்ந்தவர்.

இலங்கை தமிழரான மதுமிதா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஜெர்மனியில்தான். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் மதுமிதா.

பாவனியிடம் ஜொள்ளு

பாவனியிடம் ஜொள்ளு

ஆங்கிலத்தையும் இலங்கை தமிழையும் கலந்து கட்டி பேசி வரும் மதுமிதாவின் மொழி பலருக்கு புரியவில்லை என ஹவுஸ்மேட்டுகளே கூறி வருகின்றனர். இந்நிலையில் மதுமிதாவிடம் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார் அபிஷேக். முதலில் பாவனியை அழகாக இருக்கிறாய் என ஜொள்ளுவிட்டார் அபிஷேக்.

வேற லெவலில் கனெக்ட் ஆகிவிட்டேன்

வேற லெவலில் கனெக்ட் ஆகிவிட்டேன்

தற்போது மதுமிதா பக்கம் தாவியுள்ளார் அபிஷேக். நேற்றைய எபிசோடில் பாத்ரூம் ஏரியாவில் நின்று மதுவிடம் பேசிய அபிஷேக், உனக்கு எதிராக என்னால் விளையாட முடியாது. நான் வேற லெவலில் உன்னோடு கனெக்ட் ஆகி விட்டேன் என்றார்.

எனக்கு மதுவை பிடிக்கும்

எனக்கு மதுவை பிடிக்கும்

மேலும் மதுமிதாவை கேப்டன் ஆக்கி அவரை யார் என்று இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் காட்டுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு தெரிகிறார் அபிஷேக். யாராவது ஏன் மதுமிதாவுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள் என்று கேட்டால் எனக்கு மதுவை பிடிக்கும் என்று சொல்வேன் என வசனம் பேசி வருகிறார் அபிஷேக்.

மதுமிதாவுக்கு ரூட் போடுகிறாரா?

மதுமிதாவுக்கு ரூட் போடுகிறாரா?

இதனை பார்த்த ரசிகர்கள் இது அபிஷேக்கின் கேம் பிளானா அல்லது அபிஷேக் மதுமிதாவுக்கு ரூட் போடுகிறாரா என கேட்டு வருகின்றனர். மேலும் பலர் அபிஷேக்கிற்கு ஜெர்மனிக்கு போக ஆசை வந்துவிட்டது போல என கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் பார்த்ததே இல்லை

பிக்பாஸ் பார்த்ததே இல்லை

ஏற்கனவே சமூக வலைதளங்களில் பக்கா ட்ரோல் புராடெக்ட் ஆகி வருகிறார் அபிஷேக். பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து அவர் பேசிய வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது. ஆனால் கமல் கேட்டப்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என சத்தியம் செய்யாத குறையாக கூறினார் அபிஷேக்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

இதனை வைத்தே நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் மதுமிதாவிடம் வழிந்து வழிந்து பேசுவதை பார்த்து மரணமாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X