நிரூப்புக்கு எதிராக கொம்பு சீவி விடும் அபிஷேக்.. எகிறும் பிரியங்கா.. களைகட்டும் பிக்பாஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ நிரூப், பிரியங்கா மற்றும் அபிஷேக்கை மைய்யப்படுத்தி இருந்தது. அவர்கள் மூவருக்குள்ளும் வாக்குவாதம் நடப்பதும் பிரியங்கா பிக்பாஸிடம் குறும்படம் கேட்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இந்த புரமோவும் அந்த மூன்று பேரை மைய்யப்படுத்தியே உள்ளது.

கொம்பு சீவி விடும் அபிஷேக்

கொம்பு சீவி விடும் அபிஷேக்

இது முதல் புரமோவின் தொடர்ச்சியாக இருக்கும் என தெரிகிறது. இந்த புரமோவில் அபிஷேக்கிடம் பேசும் பிரியங்கா, என்னடா பேசுறான் அவன் என நிரூப்பை குறிப்பிட்டு கேட்கிறார். இதைத்தொடர்ந்து பிரியங்காவிடம் தனியாக அமர்ந்து பேசும் அபிஷேக் அவரை நிரூப்புக்கு எதிராக செமயாக கொம்பு சீவி விடுகிறார்.

சீப்பா பிஹேவ் பண்ணா?

சீப்பா பிஹேவ் பண்ணா?

நீதான் அவனுக்கு இவ்ளோ பில்டப் கொடுத்து, சேஃப் கார்டு கொடுத்து, அவன பாதுகாத்து, அவன அடகாத்து அவன தூக்கி ஒரு நெஸ்ட்ல வச்சிருக்கல்ல.. நீதான் காரணம்.. தப்பு பண்ணா சொல்லிக் கொடுக்கலாம்.. சீப்பா பிஹேவ் பண்ணா, சொல்லி கொடுக்க முடியாது என பிரியங்காவை ஏற்றி விடுகிறார்.

அது உனக்கு தெரியுமா?

அது உனக்கு தெரியுமா?

இதனை தொடர்ந்து பேசும் நிரூப், நீங்களே எல்லாம் முடிவு பண்ணிட்டு பேசிடுவீங்க... நாங்க எதுவும் பேசக்கூடாது என்கிறார். இதனைக் கேட்கும் பிரியங்கா, அப்போ உன் வாயில என்ன ஃபீடிங் பாட்டில வச்சிருந்தாங்களா என்கிறார். மேலும் சனிக்கிழமை குறும்படத்திற்காக காத்திருக்கிறோம், அது உனக்கு தெரியுமா என்றும் நிரூப்பிடம் கேட்கிறார்.

இன்றும் பிராங்க்கா?

இன்றும் பிராங்க்கா?

இதனைக் கேட்ட நிரூப் போடி போடி என்று கூறியப்படி செல்கிறார். அதற்கு பதில் சொல்லும் பிரியங்கா வெளியே போன்னு சொன்னா போயிடுவேண்டா என்கிறார். இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் நேற்று போல இன்றும் பிராங்க் செய்கிறார்களா என்று கேட்டு வருகின்றனர்.

Recommended Video

Simbhu -வ மட்டும் பாராட்டாதீங்க Kalyani Transformation பத்தி தெரியுமா! | Maanadu
அபிஷேக் வந்த பிறகுதான்

அபிஷேக் வந்த பிறகுதான்

இன்னும் சிலர் புரமோவை பார்த்தும் எதுவும் சொல்ல முடியாது, இவர்களை நம்பியும் எதுவும் பேச முடியாது என கூறி வருகின்றனர். இன்னும் சிலர் அபிஷேக் வந்த பிறகுதான் பிரியங்கா ரொம்பவே மாறிவிட்டார். பிரியங்கா மற்றும் நிரூப்பின் நட்பை பிரிக்கவே அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார் என்றும் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X