மொசப் புடிக்கிற நாயா... கண்ணியத்தை குறைக்காதீங்க என கமல் எச்சரித்தும் வார்த்தையை விட்ட தாமரை!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் மோசமாக சண்டை போட்டுக்கொண்ட பாவனியையும் தாமரை செல்வியையும் விளாசி விட்டார் கமல்ஹாசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பால் கறக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின் போது பாவனிக்கும் தாமரை செல்விக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள கைகளை ஓங்கினர். தரம் தாழ்ந்த வார்த்தைகளையும் தடித்த வார்த்தைகளையும் பயன்படுத்தினர்.

சண்டை குறித்த விசாரித்த கமல்

சண்டை குறித்த விசாரித்த கமல்

இதனால் சமூக வலைதளங்களில் பாவனியையும் தாமரை செல்வியையும் நெட்டிசன்கள் விளாசினர். இந்நிலையில் இன்று அகம் டிவி வழியாக ஹவுஸ்மேட்டுகளை சந்தித்த கமல் தாமரையிடமும் பாவனியிடமும் சண்டை குறித்து விசாரித்தார்.

மாறி மாறி குற்றச்சாட்டு

மாறி மாறி குற்றச்சாட்டு

அப்போது இருவரும் நடந்தது என்ன என தங்களின் தரப்பு நியாயத்தை கூறினர். எப்போதுமே தன்னை பட்டு பட்டென்று பேசுகிறார் என பாவனி மீது தாமரை குற்றம் சாட்டினார். பாவனியும் தாமரை உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு தன்னிடம் கோப்படுவதாக கூறினார்.

கமலே கடுப்பானார்

கமலே கடுப்பானார்

இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டதோடு கமல் முன்பே வாக்குவாதம் செய்து கொண்டனர். கமல் தடுக்க முயன்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சண்டை போட்டுக் கொண்டனர். அவர்களின் அந்த நடத்தையால் கமலே கடுப்பானார்.

ஒன்னு விட்ட சகோதரிகளாக

ஒன்னு விட்ட சகோதரிகளாக

பின்னர் இருவரும் கைகளை ஓங்கிக்கொண்டது குறித்தும் பேசினார் கமல். நீங்கள் கைகளை ஓங்கியதை பார்த்ததும் ஒன்னு விட்ட சகோதரிகளாக ஆகிவிடுவீர்களோ என்று தோன்றியது என்றார். மேலும் பட்டு பட்டுன்னு பேசாமல் படாமல் பேசுங்கள் என்றும் சூடுபோட்டார்.

உங்கள் மகன் பார்க்கிறார்

உங்கள் மகன் பார்க்கிறார்

மேலும் தரத்தையும் கண்ணியத்தையும் குறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்த கமல், தாமரையிடம் உங்கள் மகன் பார்க்கிறார், அதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்ற கமல் நீங்கள் கோபப்படுவதை பார்த்தால் உங்கள் மகன் அம்மா என்ன இப்படி கோபப்படுகிறார் என்று கூறப்போகிறார் என்றார்.

மொசப்புடிக்கிற நாய்...

மொசப்புடிக்கிற நாய்...

இதையெல்லாம் கேட்ட தாமரை இனிமேல் பழகி கொள்கிறேன் என்றார். ஆனால் கமல் இடைவெளியில் சென்றதும் கார்டன் ஏரியாவில் அக்ஷாராவிடம் பேசிக் கொண்டிருந்த தாமரை செல்வி, பாவனி தன்னை பிடிக்கும் என்று கூறியதை விமர்சித்தார். மொசப்புடிக்கிற நாயை மூஞ்ச பார்த்தால் தெரியாதா என்று கேட்டும் வார்த்தையை விட்டார் தாமரை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X