அறிவில்லையா... சிபியிடம் ஆவேசமாக கத்தும் அக்ஷரா... இன்னைக்கு செம எண்டர்டெய்ன்மென்ட் இருக்கும் போல!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது இன்றைய முதல் புரமோவில் தெரியவந்தது.
இதில் பங்கேற்க ஹவுஸ்மேட்ஸ் பொம்மைகள் போலவே அரிதாரம் பூசிக்கொண்டு ஆட்டத்திற்கு தயாராக உள்ளனர். கடைசியாக போட்டி நடக்கும் கூடாரத்திற்குள் வரும் போட்டியாளர் டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்படுகிறது.

அசிங்கமா விளையாடக் கூடாது
இதனால் முதல் நபராக பிரியங்கா டாஸ்க்கில் இருந்து வெளியேறுவதும் காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது புரமோவில் நிரூப்புக்கும் வருணுக்கும் இடையே கடுமையாக சண்டை நடப்பது தெரியவந்தது. வருணை விளையாட விடாமல் நிரூப் பிடித்து இழுத்ததால் கோபமான வருண் இதுபோன்று அசிங்கமாக விளையாடக்கூடாது என்றார்.

என்னை பிடிக்கக் கூடாது
ந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் பொம்மைகளை எடுத்துக்கொண்டு ஹவுஸ்மேட்ஸ் ஓடும் போது அக்ஷராவை பிடித்து ஓடாமல் தடுக்கிறார் நிரூப். இதனால் கடுப்பான அக்ஷரா, நீங்கள் இதுபோன்று என்னை பிடிக்கக்கூடாது என வாக்குவாதம் செய்கிறார்.

அறிவில்லையா என கத்திய அக்ஷரா
இதில் தலையிடும் சக போட்டியாளரான சிபி, மற்றொரு டாஸ்க்கில் அக்ஷரா செய்ததை சுட்டிக் காட்டி பேசுகிறார். அப்போது தனது தரப்பு நியாயத்தை சொல்கிறார் அக்ஷரா. இதில் சிபிக்கும் அக்ஷராவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் கடுப்பாகும் அக்ஷரா அறிவில்லையா என கேட்டு சிபியிடம் கத்துகிறார்.

கண்ணீர் விட்டு அழுத அக்ஷரா
நேற்றைய எபிசோடிலேயே கேப்டனாக ஆசைப்பட்ட அக்ஷராவின் பானையை முதல் நபராக அடித்து உடைத்த சிபி அவரது கேப்டன் ஆசையில் மண்ணை வாரி கொட்டினார். இதனால் மனமுடைந்த அக்ஷரா, பிரச்சனையை பேசி தீர்த்த பிறகும் சிபி மனதில் வைத்துக்கொண்டு நடந்து கொள்வதாக வருணிடம் புலம்பினார். சிபி செய்ததை பார்த்து கண்ணீர் விட்டும் அழுதார் அக்ஷரா.

செம எண்டர்டெய்ன்மென்ட் இருக்கு
ஏற்கனவே சிபிக்கும் அக்ஷராவுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக உள்ளது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியிலும் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்னைக்கு செம எண்டர்டெய்ன்மென்ட் இருக்கும் போல என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











