ராஜுவுடன் மோதல்... பிரியங்காவை திட்டி தீர்த்த அக்ஷரா.. ஃபினாலே ரேஸால் ரணகளமான பிக்பாஸ் வீடு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் ஃபினாலே ரேஸ் தொடங்கியுள்ளது. இதற்காக பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் நாமினேட் செய்துள்ளார் .
ஃபினாலே ரேஸின் ஒவ்வொரு டாஸ்க்கிலும் வெற்றி பெறும் போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்கள்.

ரேங்க் டாஸ்க்
அந்த வகையில் பிக்பாஸ் ஃபினாலே ரேஸின் முதல் டாஸ்க்கான ரேங்க் டாஸ்க்கில் சிபி வெற்றி பெற்றார். இதன் மூலம் முதல் நபராக நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார் சிபி. அதனை தொடர்ந்து நேற்று இரண்டாவது டாஸ்க் நடைபெற்றது.

மூன்றாவது டாஸ்க்
பஸ் டாஸ்க்கான இந்த டாஸ்க்கில் நிரூப் வெற்றி பெற்றார். இதன்மூலம் நாமினேஷன் புராசஸில் இருந்து அவரும் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் ஃபினாலே ரேஸாக மூன்றாவது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது இன்று வெளியான முதல் புரமோவில் தெரிய வந்தது.

யாருடைய முகம் மேல் நோக்கி..
அதன்படி டைஸ் போன்ற வடிவத்தில் ஒவ்வொரு பக்கமும் ஒரு போட்டியாளரின் முகம் பதியப்பட்டுள்ளது. இதில் ஒரு பஸர் அடிக்கும் போது அந்த டைஸை திருப்ப தொடங்க வேண்டும். அடுத்த பஸர் அடிக்கும் போது யாருடைய முகம் மேல் நோக்கி இருக்கிறதோ அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்ஷராவுக்கு செக் வைத்த ராஜு
இதனால் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு டைஸை உருட்டுகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் அக்ஷராவை வெளியேற்றும் முடிவில் உள்ளார் ராஜு. இதற்காக அக்ஷராவின் படம் மேல்நோக்கி வந்ததும் அதன்மீது ஏறி அமர்ந்து கொள்கிறார் ராஜு.

என்னிடம் எப்போதும் பேசாதீர்கள்
இதனால் கடுப்பாகும் அக்ஷரா தான் விளையாடப்போவதில்லை என கூறி தனியாக அமரும் அக்ஷரா, இது ராஜு அண்ணா என்பதால்தான் நான் இங்கு உட்காந்திருக்கிறேன், வேறு யாராக இருந்தாலும் நான் அவர்களை தள்ளி விட்டிருப்பேன் என்கிறார். தொடர்ந்து ராஜுவிடம் பேசும் அக்ஷரா, என்னிடம் பேசாதீர்கள் ராஜு அண்ணா, எப்போதும் என்னிடம் பேசாதீர்கள் நான் சத்தியமாக சொல்கிறேன் என ஆக்ரோஷமாக கத்துகிறார்.

இப்டிலாம் என்கிட்ட பேசாத..
அப்போது பிரியங்கா ஏதோ சொல்கிறார். இதனைக் கேட்ட அக்ஷரா த போ.. என மரியாதை குறைவாக பேசுகிறார். இதனால் டென்ஷனாகும் பிரியங்கா, நான் மரியாதை பேசுகிறேன், நீயும் மரியாதையாக பேசு.. போ வான்னுலாம் என்கிட்ட பேசுற வேலை வச்சுக்காதே என்கிறார் பிரியங்கா.

சரியான சண்டை
இதனைக் கேட்ட அக்ஷரா நான் உன்கிட்ட பேசல.. யார் நீ என பிரியங்காவிடம் எகிறுகிறார். இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்றைய எபிசோடும் நல்ல சுவாரசியமாக இருக்கும் போல என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











