ராஜு பிரியங்கா மீது கடும் கோபம்... தன்னைத்தானே தாக்கிக்கொண்ட அக்ஷரா... அனல் பறந்த ஃபினாலே டாஸ்க்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் டாஸ்க்கின் போது ராஜு மற்றும் பிரியங்கா மீது கடும் கோபம் கொண்ட அக்ஷரா தன்னை தானே தாக்கிக்கொண்டது ஹவுஸ்மேட்டுகளை அதிர்ச்சி அடைய செய்தது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபினாலே ரேஸ் ஆரம்பமாகியுள்ளது. இதனை முன்னிட்டு இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களையும் நாமினேட் செய்துள்ளார் பிக்பாஸ்.
இதன் தொடர்ச்சியாக ஹவுஸ்மேட்டுகளுக்கு அடுத்தடுத்து டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் நாமினேஷன் புராசஸில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.

டைஸ் உருட்டும் டாஸ்க்
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் மூன்று டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன. இதன் முதல் டாஸ்க்கில் போட்டோக்களின் அடிப்படையில் பிக்பாஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இரண்டாவது டாஸ்க் பலூன் உடைக்கும் டாஸ்க், மூன்றாவது டாஸ்க் டைஸ்ஸை உருட்ட வேண்டும்.

கடுப்பான ராஜு..
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பலூன் உடைக்கும் டாஸ்க்கில் அக்ஷராவுக்கும் ராஜுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ராஜுவின் பலூன்களை உடைக்க மாட்டேன் என்று கூறி விட்டு கடைசியில் அக்ஷரா அவருடைய பலூன்களை உடைத்ததால் கடுப்பான ராஜு, ஆட்டத்தை விட்டு வெளியேறிய பிறகும் அக்ஷராவின் பலூன்களை உடைத்தார்.

டைஸில் போட்டோக்கள்
இதனால் பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மூன்றாவது டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் டைஸின் ஒவ்வொரு பக்கமும் ஒரு போட்டியாளரின் முகம் பதியப்பட்டிருந்த ப்ராப்பர்ட்டி கொடுக்கப்பட்டது. இதில் ஒரு பஸர் அடிக்கும் போது அந்த டைஸை திருப்ப தொடங்க வேண்டும்.

டைஸ் மீது அமர்ந்த ராஜு
மூன்றாவது பஸர் அடிக்கும் போது யாருடைய முகம் மேல் நோக்கி இருக்கிறதோ அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு டைஸை உருட்டினர். அக்ஷராவின் முகம் மேலே வந்த போது ராஜு டைஸின் மீது ஏறி அமர்ந்து அதனை உருட்டாதப்படி பார்த்துக் கொண்டார்.

தள்ளி விட்டிருப்பேன்
இதனால் கடுப்பான அக்ஷரா, இப்படி செய்தால் எப்படி விளையாடுவது என கூறி ராஜுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து விளையாடாமல் அமர்ந்த அக்ஷரா, இது ராஜு அண்ணா என்பதால்தான் நான் இங்கு உட்காந்திருக்கிறேன், வேறு யாராக இருந்தாலும் நான் அவர்களை தள்ளி விட்டிருப்பேன் என்றார்.

மரியாதை குறைவாக
மேலும் ராஜுவிடம் பேசிய அக்ஷரா, என்னிடம் பேசாதீர்கள் ராஜு அண்ணா, எப்போதும் என்னிடம் பேசாதீர்கள், என் அப்பா மீது சத்தியமாக சொல்கிறேன் என ஆங்கிலத்தில் கத்தினார். அப்போது போட்டியின் நடுவரான பிரியங்கா தமிழில் பேசுங்கள் என்று கூற அக்ஷரா த போ.. என மரியாதை குறைவாக பேசினார்.

மரியாதை கிடைக்கும்
இதனால் டென்ஷனான பிரியங்கா, நான் மரியாதையாக பேசுகிறேன், நீயும் மரியாதையாக பேசு.. போ வான்னுலாம் என்கிட்ட பேசுற வேலை வச்சுக்காதே, மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும் என்றார். இதனைக் கேட்ட அக்ஷரா நான் உன்கிட்ட பேசல.. யார் நீ என பிரியங்காவிடம் எகிறினார்.

மன பக்குவம் இல்லை..
ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த அக்ஷரா, டைஸின் மீது தனது கையால் அடித்து தன்னை தானே தாக்கிக்கொண்டு கோபத்தை காட்டினார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சி அடைந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் அக்ஷராவுக்கு தோல்வியை தாங்கிக்கொள்ளும் மன பக்குவம் இல்லை என்று கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











