பிக்பாஸ் அக்ஷரா ரெட்டியோட இரண்டாவது ஹீரோவ பார்த்திருக்கீங்களா... தீயாய் பரவும் ஃபேமிலி போட்டோ!
சென்னை: பிக்பாஸ் அக்ஷரா ரெட்டியின் ஃபேமிலி போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அக்ஷரா ரெட்டி. பல்வேறு அழகிப் போட்டிகளில் வென்றுள்ளார் அக்ஷரா.
அக்ஷரா ரெட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அவர் குறித்து பல்வேறு சர்ச்சசைகளும் வெளியான வண்ணம் உள்ளன.

தங்கக் கடத்தல்
குறிப்பாக அக்ஷரா ரெட்டி தங்கக் கடத்தலில் ஈடுபட்டு சிபிஐ - ஆல் கைது செய்யப்பட்டவர் என்றும் பிளாஸ்ட்டிக் சர்ஜரி செய்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்சியில் பங்கேற்றுள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பிரியங்காவால் டார்கெட் செய்யப்படுவதால் அக்ஷரா மீது ரசிகர்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுள்ளது.

முதல் ஹீரோ அப்பாதான்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் தனது வாழ்க்கையில் சந்தித்த ஹீரோக்களை பற்றி பேசினார் அக்ஷரா ரெட்டி. தன்னுடைய முதல் ஹீரோ தனது அப்பாதான் என்று கூறிய அக்ஷரா ரெட்டி அவர் தான் சிறு பிள்ளையாக இருக்கும் போதே இறந்துவிட்டதாக கூறினார்.

அப்பா இல்லாத குறை தெரியாமல்
தனது அப்பாவுக்கு பிறகு தனது அண்ணன்தான் அப்பா இல்லாத குறை தெரியாமல் வளர்த்ததாக கூறினார். இதனைல் தனது இரண்டாவது ஹீரோ தன்னுடைய அண்ணன்தான் என்று கூறி கண்ணீர் விட்டார். இந்நிலையில் அக்ஷராவின் ஃபேமிலி போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் போட்டோ
அந்த போட்டோவில் அக்ஷரா ரெட்டி தனது அம்மா மற்றும் அண்ணனுடன் உள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இவர்தான் உங்களின் இரண்டாவது ஹீரோவா என கேட்டு வருகின்றனர். இதேபோல் அக்ஷரா ரெட்டியின் இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











