உங்கக்கூட பேச விருப்பமில்லை.. சமாதானம் பேச வந்த சிபியிடம் முகத்தைக் காட்டிய அக்ஷரா.. பிக்பாஸ் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கனா காணும் காலங்கள் என்ற இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலாக மாற்றப்பட்டுள்ளது.
இதில் சிபி வார்டனாகவும், ராஜு, அமீர், அபிஷேக் ராஜா ஆகியோர் டீச்சராகவும் உள்ளனர். மற்ற அனைவரும் ஸ்டுடன்ட்டாக உள்ளனர்.

இன்று அக்ஷரா ரெட்டி
நேற்றைய எபிசோடில் சேட்டை செய்யும் மாணவியாக பிரியங்கா எரிச்சல் படுத்தினார். அவர் செய்த சேட்டைகள் எல்லை மீறி போனதால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை விளாசி வந்தனர். இந்நிலையில் இன்று வெளியான இரண்டு புரமோக்களிலுமே அக்ஷரா ரெட்டிதான் காட்டப்பட்டார்.

கன்ஃபெஷன் ரூம்முக்குள்..
சிபியிடம் கோபப்பட்ட அக்ஷா ரெட்டி, பொருட்களையெல்லாம் போட்டு உடைத்தார். அறிவு இருக்கா இல்லையா என்று கேட்டும் கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்தார். இதனால் பிக்பாஸ் அக்ஷராவை கன்ஃபெஷன் ரூம்முக்குள் அழைத்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பேச விருப்பம் இல்லை
இதில் கார்டன் ஏரியாவில் பள்ளிக்கூட யூனிஃபார்முடன் அமர்ந்துள்ளார் அக்ஷரா. அவரிடம் வார்டனான சிபி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பேசும் அக்ஷரா நீங்கள் பேசுவது, நீங்கள் செய்யும் சில விஷயங்கள் எல்லாம் தேவையில்லாததை போல் உள்ளது. இதுக்கு மேல உங்கக்கிட்ட பேச விருப்பம் இல்லை என்றும் என்று கூறுகிறார்.

வருவது என்றால் வரலாம்
இதனை தொடர்ந்து பேசும் சிபி எல்லோரிடமும் நடந்து கொள்வதை போன்றுதான் நடந்து கொள்கிறேன். இப்படிதான் இருக்கும். வருவது என்றால் வாங்க.. இல்லாவிட்டால் உங்க இஷ்டம் என்று கூறுகிறார். அதற்கு சரி சரி என்று கூறியப்படி கார்டன் ஏரியாவிலேயே அமர்ந்துள்ளார் அக்ஷரா. இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ.


Click it and Unblock the Notifications











