மாத்தி மாத்தி பேசாத.. ஒரே நிலையா இருக்க மாட்டியா... டார்கெட்டி செய்த பாவனியை வாங்கிவிட்ட அக்ஷரா!
சென்னை: நேற்றைய எபிசோடில் தன்னை டார்கெட் செய்து பனிஷ்மெண்ட் கொடுத்த பாவனியை வாங்கி விட்டார் அக்ஷரா.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆகாயம் காயினின் ஆளுமைக்கான வாரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த காயினை கைப்பற்றி வைத்துள்ள பாவனிக்கு லிவிங் ஏரியாவில் கன்ட்ரோல் செய்யும் பவர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது அனுமதி இல்லாமல் லிவிங் ஏரியாவில் சென்றாலோ அல்லது காயின் இல்லாத போது லிவிங் ஏரியாவுக்குள் செல்லாமல் இருந்தாலோ அந்த ஹவுஸ்மேட்டுக்கு பனிஷ்மெண்ட் வழங்கி வருகிறார் பாவனி.

பேச்சை கேட்காமல்
ஆனால் இசைவானியின் நெருப்பு காயின் டாஸ்க்கின் போது எப்படி அவரது பேச்சைக் கேட்காமல் இருந்தார்களோ அதேபோல் பாவனியின் ஆளுமையின் போதும் சில ஹவுஸ்மேட்ஸ் அவரது பேச்சை கேட்காமல் இருந்து வருகின்றனர்.

ஸ்டாண்டில் காயின் இருந்தபோது
ஆனால் அவர்களிடம் பெரிதாக ரியாக்ட் செய்யாத பாவனி, தனக்கு ஆகாதவர்கள் சிறியதாக ஒரு தவறு செய்தாலும் பெரிய பனிஷ்மெண்ட் கொடுத்து வச்சு செய்கிறார். அந்த வகையில் நேற்றைய எபிசோடில் பெடல் ஸ்டாண்டில் காயின் வைக்கப்பட்டிருந்தப்போது பாவனியின் அனுமதி இல்லாமல் சென்றார் அக்ஷரா.

அக்ஷராவுக்கு பனிஷ்மெண்ட்
இதனை கவனித்த பாவனி காதை பிடித்துக் கொண்டு ரூல்ஸை பிரேக் பண்ண மாட்டேன் என கூறியப்படியே 50 முறை வீட்டை சுற்றி வரவேண்டும் என கூறினார். பாவனி கூறியதை கேட்டு வீட்டிற்குள் சுற்றி வந்தார் அக்ஷரா. அக்ஷரா சுற்றிக்கொண்டிருக்கும் போதே அக்ஷரா கூறும் டயலாக்கை மாற்றிக் கூறும்படி சொன்னார் பாவனி.

ஏன் மாத்தி மாத்தி பேசுற...
இதனால் கடுப்பான அக்ஷரா, ஒன்னு சொன்னா அதிலேயே நிலையா இரு மாத்தி மாத்தி பேசாத.. ரூல் பிரேக் பண்ண மாட்டேன்னு.. சொல்ல சொன்ன இப்போ ஏன் மாத்தி சொல்ற... செய்றவங்கக்கிட்ட பேசாத, செய்யாம உட்காந்திருக்கவங்கக்கிட்ட போய் முடிஞ்சா சொல் என்று பதிலடி கொடுத்தார் அக்ஷரா. இதைக் கெட்ட பாவனி, எல்லாம் நல்லா பண்றீங்க.. இதுக்கு உங்களுக்கு கைத்தட்டல் கொடுக்கணும் என்று கைகளை தட்டி விரக்தியை வெளிப்படுத்தினார்.

50 ரவுண்டு பனிஷ்மெண்ட்
காயின் வைக்காத போது வந்த மதுமதாவுக்கு 10 ரவுண்டு பனிஷ்மெண்ட் கொடுத்த பாவனி, காயின் வைத்திருந்த போது வந்த அக்ஷராவுக்கு 50 ரவுண்டு பனிஷ்மெண்ட் கொடுத்தார். இதுவே அக்ஷரா பாவனியிடம் எகிற காரணமாக இருந்தது.


Click it and Unblock the Notifications











