ப்பா.. பிரபு தேவா டான்ஸ் மாதிரியே இருந்துச்சு...டான்ஸ் மாரத்தானில் கலக்கலாய் என்ட்ரி கொடுத்த அமீர்!

சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் அசத்தல் என்ட்ரி கொடுத்துள்ளார் டான்ஸ் மாஸ்டர் அமீர்.

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்டுகளுக்கு டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

பிக்பாஸ் வீட்டில் காலையில் ஒலி பரப்பப்படும் வேக் அப் பாடல்களுக்கு சில ஹவுஸ்மேட்ஸ் மட்டுமே நடனமாடுகின்றனர்.

திறமையை சோதிக்க

திறமையை சோதிக்க

சில ஹவுஸ்மேட்ஸ் நடனமாடுவதில்லை. ஹவுஸ்மேட்டுகளின் டான்ஸ் திறமையை சோதிக்கும் வகையில் டான்ஸ் மாரத்தான் நடத்தப்படுவதாக கூறினார் பிக்பாஸ். இதில் பாடல் போடப்பட்டதும் ஜோடி ஜோடியாக போட்டியாளர்கள் நடனம் ஆட வேண்டும் என்றும் கூறினார் பிக்பாஸ்.

பாடல் ஃபேட் அவுட்

பாடல் ஃபேட் அவுட்

இதனை தொடர்ந்து ஒலிக்கப்பட்ட பாடலுக்கு ஏற்ப ஹவுஸ்மேட்ஸ், கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்ட மேடையில் நடனமாட வேண்டும். இதில் சரியாக நடனமாடாத ஜோடிக்கு ஹுட்டர் சவுண்ட் ஒலிக்கப்படும். சரியாக நடனமாடும் ஜோடிக்கு பாடல் ஃபேடு அவுட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்த டான்ஸ் மாரத்தான்

தொடர்ந்த டான்ஸ் மாரத்தான்

அதன்படி சில ஜோடிகள் சிறப்பாக நடனமாடினர். சிலர் சொதப்பினர். சொதப்பியவர்களுக்கு ஹுட்டர் சவுண்டு போட்டு மொக்கை பண்ணினார் பிக்பாஸ். இந்நிலையில் இன்றைய எபிசோடிலும் டான்ஸ் மாரத்தான் தொடர்ந்தது. இதில் முதலில் அக்ஷராவும் வருணும் நடனமாடினர்.

கோரியோகிராஃபர் தேவை

கோரியோகிராஃபர் தேவை

அடுத்ததாக தாமரையும் - சிபியும் நடனமாடினர். இரண்டு ஜோடிகளுக்குமே ஹுட்டர் சவுண்டு ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய பிக்பாஸ், சில போட்டியாளர்களை தவிர பலருக்கு சரியாக நடனமாட தெரியவில்லை. அதனால் இந்த வீட்டிற்கு ஒரு கோரியோகிராஃபர் தேவை என்று கூறினார்.

அசத்தல் என்ட்ரி

அசத்தல் என்ட்ரி

அப்போது மெய்ன் டோர் திறக்க பிரபு தேவா பாடலுக்கு அசத்தலாய் ஆட்டம் போட்டப்படி என்ட்ரி கொடுத்தார் டான்ஸ் மாஸ்டர் அமீர். பிரபு தேவாவின் தீவிர ரசிகரான அமீர், டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் நண்பர் ஆவார். சாண்டி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் அமீர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X