நீ எனக்கு அக்கா இல்ல.. என்னை தவிர இந்தியர்கள் எல்லாம் உன் சகோதரர்கள்தான்.. பாவனியிடம் வழியும் அமீர்!

சென்னை: பாவனிக்கு தான் சகோதரர் இல்லை என்று கூறி அமீர் வழிந்ததை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் பாவனி ரெட்டி. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே சக போட்டியாளரான அபினய்யும் பாவனியும் நெருக்கமாக பழகி வருகின்றனர்.

அவர்கள் இருவரும் பழகும் விதம் சக ஹவுஸ்மேட்டுகளுக்கு சந்தேகத்தை எழுப்பியது. அதற்கு ஏற்றது போலவே பாவனியும் அபினய்யின் பிஹேவிங்கில் தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறி வந்தார்.

பாவனியின் இரட்டை முகம்

பாவனியின் இரட்டை முகம்

இந்நிலையில் பாவனி - அபினய் ரிலேஷன்ஷிப் குறித்த விஷயம் கடந்த வாரம் பூதாகரமானது. இதனால் ஆவேசமான பாவனி ஆமாம், எங்களுக்குள் இருக்கு, உங்களுக்கு என்ன என்று சக ஹவுஸ்மேட்டுகளை கத்திவிட்டார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக குறும்படம் போட்ட கமல், பாவனியின் இரட்டை முகத்தை தோலுரித்தார்.

நெருக்கம் காட்டும் அமீர்

நெருக்கம் காட்டும் அமீர்

பின்னர் பேசிய பாவனி, அபினய் செய்வது பச்சையாக தெரிகிறது. ஆனால் அவருக்கு குடும்பம் இருப்பதால் அதை பெரிது படுத்தவில்லை என்றார். இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அமீரும் பாவனியிடம் நெருக்கமாக பழகி வருகிறார். ஆரம்பத்தில் அடித்து விளையாடும் அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கம் இருந்தது.

நான் உனக்கு தம்பி இல்லை

நான் உனக்கு தம்பி இல்லை

அபினய் உடனான ரிலேஷன்ஷிப் குறித்து அமீர்தான் பேசினார். இதையடுத்தே இந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டில் பூதாகரமானது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பாவனி, அமீரை தம்பி என்று அழைத்தார். அதனை ஏற்க மறுத்த அமீர், உன் வாய்தான் தம்பி என்கிறது உன் கண்கள் அப்படி சொல்லவில்லை என்றார்.

சிரிக்காமல் சொல்லு

சிரிக்காமல் சொல்லு

தொடர்ந்து உன் மனதில் உள்ளது எனக்கு தெரியும் என்றும் கூறினார் அமீர். ஆனால் அதில் ஆர்வம் காட்டாத பாவனி, இனிமேல் என்னை அக்கா என்று கூப்பிடு என்றார். அதற்கும் மறுப்பு தெரிவித்த அமீர், இதை சிரிக்காமல் சொல்லு சீரியஸாக சொல்லு என்றும் பிக்பாஸ் அவரது முகத்துக்கு க்ளோஸ் அப் வையுங்கள் என்றும் கூறி வந்தார்.

அமீர் ரொம்ப மோசம்

அமீர் ரொம்ப மோசம்

தொடர்ந்து பேசிய பாவனி, இந்தியா என் நாடு இந்தியர்கள் அனைவரும் என் சகோதரர்கள் என்றார். அதையும் ஏற்காத அமீர் என்னை தவிர என பாவனியிடம் வழிந்து வந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அமீர் ரொம்ப மோசம் என்று அவரை விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X