ஒன்னாவே சுத்திட்டு.. இப்போ இப்படி பேசுறீங்களே.. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ரகசிய வாக்கெடுப்பு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் விளையாடு இல்ல வெளியே ஓடு என்ற டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ்.
இதனை தொடர்ந்து ஒரு போட்டியாளர் எப்படி விளையாடக் கூடாது என நடைபெறும் வாக்கெடுப்பில் சக போட்டியாளர்கள் வாக்களித்தனர். இதில் அதிகம் பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக்கின் பெயர்களை கூறினர். அவர்களுக்கு என தனி தனி பட்டமும் கொடுக்கப்பட்டது.

சுவாரசியமா இருக்கிறதா?
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இந்த புரமோ முழுக்க முழுக்க பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக்கை மையப்படுத்தி உள்ளது. இதில் அவர்கள் 3 பேரிடமும் தனித்தனியாக ஆக்டிவிட்டி ஏரியாவில் வைத்து சுவாரசியமா இருக்கிறதா என கேட்கிறார்.

இன்னும் கொஞ்சம் ஜாலியாக இருக்கலாம்
இதில் முதல் ஆளாக பேசும் அபிஷேக், இதில் சுவாரசியம் இருக்கா என தேட வேண்டியிருக்கு என்று கூறுகிறார். மேலும் சுவாரசியம் இல்லாத போட்டியாளர் என பிரியங்காவை சொல்வதாக கூறும் அபிஷேக் அவர் ஒரு போர்வையை போர்த்தியிருக்கிறாரோ என தெரிகிறது அவர் இன்னும் கொஞ்சம் ஜாலியாக இருக்கலாம் என்று அவரது பெயரை எழுதி ஆக்டிவிட்டி ஏரியாவில் உள்ள கண்ணாடி பாக்ஸில் போடுகின்றார்.

சந்தேகமே இல்லை அவருதான்
அடுத்து பேசும் நிரூப், நான் நானாதான் இருக்கேன் என்று சொல்லும் இருவரின் பெயரை சொல்லலாம் என்று பிரியங்காவின் பெயரை எழுதி கண்ணாடி பாக்ஸில் போடுகிறார். அடுத்து வரும் பிரியங்கா சந்தேகமே இல்லை, நிரூப் மற்றும் அபிஷேக் என கூறுகிறார். இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ.

முடிவு செய்ய முடியாது
இதன்மூலம் எப்போதும் ஒன்றாக சுற்றி வரும் பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகிய 3 பேரும் எதிரெதிராக வாக்களிப்பதாக தெரிகிறது. பிக்பாஸ் என்ன கேள்வி கேட்கிறார்? எந்த கேள்விக்கு யாருடைய பெயர்களை கூறுகிறார்கள் என்பது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிய வரும். பிக்பாஸ் புரமோவை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. அதோடு பிக்பாஸ் புரமோவில் காட்டப்படும் பல சம்பவங்கள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படுவதில் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











