வெற்றிக்கொடிக்கட்டு டாஸ்க்கில் வெளுத்துக்கட்டிய அண்ணாச்சி... வெற்றி பெற்ற கட்சி எது தெரியுமா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடைபெற்ற வெற்றிக் கொடிக் கட்டு டாஸ்க்கில் இரண்டு கட்சிகள் வெற்றி பெற்றன.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் மாநாடு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹவுஸ்மேட்ஸ் மூன்று அரசியல் கட்சிகளாக பிரிந்துள்ளனர்.
ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு என தனிச் சின்னம், தனிக் கொடி மற்றும் கொள்கைகளை கொண்டுள்ளனர்.

கட்சிக்கு 4 பேர்
இதில் ராஜு தலைமையில் பிக்பாஸ் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியும், சஞ்சீவ் தலைமையில் என்பிபி என்ற கட்சியும் பிரியங்கா தலைமையில் உரக்க சொல் என்ற கட்சியும் அறிவிக்கப்பட்டுள்து. ஒவ்வொரு கட்சியிலும் மொத்தம் 4 பேர் உள்ளனர்.

பிஸிக்கல் டாஸ்க்
அரசியல் மாநாடு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதால் மொத்த பேரும் பேசி பேசி வச்சு செய்வார்கள் என மிரண்டனர் ரசிகர்கள். ஆனால் இதில் பிஸிக்கல் டாஸ்க்கை கொடுத்து ஹேப்பியாக்கினார் ஹவுஸ்மேட்ஸ். அதன்படி மொத்த அரசியல் கட்சிக்கும் சேர்த்து வெற்றிக் கொடிக்கட்டு என்ற டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ்.

கொடி கம்பத்தில் கொடிகள்
அதன்படி கார்டன் ஏரியாவில் போடப்பட்ட வட்டத்திற்குள் இரண்டு கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. இதில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தலா ஒருவர் என மூன்று போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும். முதல் பஸருக்கு போட்டியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது பஸருக்கு கொடி கம்பத்தில் தங்களின் கொடியை நடும் போட்டியாளர்களுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.

இரண்டு கட்சிகள் வெற்றி
மொத்தம் 6 ரவுண்டுகளாக போட்டி நடைபெற்றப்பட்டது. இதில் ராஜுவின் பிக்பாஸ் மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சஞ்சீவின் என்பிபி கட்சிகள் தலா 6 மதிப்பெண்களை பெற்றது. பிரியங்காவின் உரக்க சொல் கட்சி வெறும் நான்கு மதிப்பெண்களை பெற்றது. இதில் அதிக மதிப்பெண்களை பெற்ற இரண்டு கட்சிகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

செம மல்லுக்கட்டு..
இந்த போட்டியின் ஒரு சுற்றில் அண்ணாச்சி, பாவனி மற்றும் தாமரை செல்வி ஆகியோர் மோதினர். அப்போது தாமரையின் கொடி கீழே விழவும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இமான் அண்ணாச்சி, தமாரை செல்வியுடன் செமயாய் மல்லுக்கட்டி வெற்றி பெற்றார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத தாமரை செல்வி, அண்ணாச்சியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் இரு அணிகளுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











