முதல் சீசன்ல ஓவியா பாடினது.. இப்போ யார் பாடினாங்க தெரியுமா? டங் டிவிஸ்ட்டர் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் டங் டிவிஸ்ட்டர் டாஸ்க்கை கொடுத்து ஹவுஸ்மேட்டுகளை திணறடித்தார் பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பள்ளிக்கூட டாஸ்க் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கொடுக்கப்பட்டது. இதில் தமிழ் ஆசிரியராக ராஜு இருந்தார்.
நேற்று பள்ளிக்கூட டாஸ்க்கின் கடைசி நாள் என்பதால் டங் டிவிஸ்டர் டாஸ்க்கு மற்றும் கடிதம் எழுதும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இமான் அண்ணாச்சி
இதில் முதல் மாணவராக வந்த இமான் அண்ணாச்சி, பத்திரத்த பத்திரமான இடத்துல பத்திரமா வச்ச பத்திரம் பத்திரமா இருக்குமா என்றும் லாரி நிறைய இராலு அதுல 4 இராலு நாறுன இராலு என்றும்,
யாரு தச்ச சட்டை எங்க தாத்தா தச்ச சட்டை என்றும் தொடர்ந்து கூறி அப்ளாஸை வாங்கினார்.

பழுத்த கிழவி..
அடுத்து வந்த பிரியங்கா, பழுத்த கிழவி கொழுத்த மழையில் வழுக்கி விழுந்தால் என்று கூறினார். இதேபோல் அக்ஷரா
சேத்துகுள்ள சின்னப்புள்ள தத்தி தத்தி சிக்கிக்கிச்சு என்று தொடர்ந்து கூறினார். பின்னர் அதையே பாடலாகவும் பாடினார் அக்ஷரா.

கோழி கெழடு
அடுத்து வந்த வருண் கோழி கெழடு கோழி குடலும் கெழடு திக்கி திணறி கூறினார். அவரை தொடர்ந்து வந்த பாவனி, ரோட் ரோலர் டங் டிவிஸ்ட்டரை கூறினார். நிரூப் புள்ளுக்குள்ள பூச்சு என்ற டங் டிவிஸ்ட்டரை கூறினார். அடுத்து வந்த ஐக்கி பெர்ரி, ரெண்டு செட்டு சோள தோசை என்ற டங் டிவிஸ்ட்டரை பாடல் போல பாடினார்.

வீட்டுக்கிட்ட கோரை
அவரை தொடர்ந்து அபினய் வீட்டுக்கிட்ட கோரை என்ற டங் டிவிஸ்ட்டரை கூற முயற்சித்தார். கடைசியாக வந்த தாமரை செல்வி, கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட என்பதை கலக்கலாக டான்ஸுடன் சொல்லி முடித்தார். இந்த நெட்ட கொக்கு டங் டிவிஸ்டர் முதல் சீசனின் பள்ளிக்கூட டாஸ்க்கில் ஓவியா கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

எமோஷனல் ஆன பிரியங்கா
இதனை தொடர்ந்து கடிதம் எழுதும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அனைத்து மாணவ மாணவிகளும் அவரவர் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதினர். இதில் பிரியங்கா, அக்ஷரா ஆகியோர் எமோஷனலாகினர். வருண் தனது அப்பாவுக்கு கடிதம் எழுதினார். நிரூப் தனது அம்மாவுக்கு கடிதம் எழுதினார். டங் டிவிஸ்டர் டாஸ்க்கில் இமான் அண்ணாச்சிக்கு பரிசு வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











