விளையாடு.. இல்ல வெளியே ஓடு.. பிக்பாஸே கடுப்பாயிட்டாரு போல.. இது எதுல போய் முடியப்போகுதோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கான பஞ்ச தந்திரம் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதன் முதல் கட்டத்தில் காயின்களை எடுத்த போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட ஏரியாக்களில் ஆளுமை சக்தி வழங்கப்பட்டு காயினை பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

விளையாடு இல்ல வெளியே ஓடு
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ். அதாவது விளையாடு இல்ல வெளியே ஓடு என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. டாஸ்க் ரூல்ஸ்களை ராஜு ஜெயமோகன் படித்து காட்டுகிறார்.

எப்படி இருக்கக் கூடாது?
அதன்படி இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டி போடும் நபர்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் முதல் நபராக வாக்களிக்கும் வீட்டின் கேப்டனான சிபி, தூங்குற நேரம்லாம் பேசிட்டு பகல் நேரத்துல தூங்குறது என கூறி வாக்களிக்கிறார். பெரும்பாலும் இது பிரியங்காவுக்காகதான் இருக்கும் என தெரிகிறது.

நிரூப் மற்றும் பிரியங்கா
அடுத்த பாவனி ரெட்டி, பிரியங்கா மற்றும் நிரூப்பின் பெயரை குறிப்பிட்டு வாக்களிக்கிறார். அவரை தொடர்ந்து வரும் வருண், அபிஷேக் ராஜா மைக்கே இல்லாமல் நிறைய முறை பேசியிருப்பதாக கூறி வாக்களிக்கிறார். இதேபோல் ஐக்கி பெர்ரியும் அபிஷேக்கிற்கு எதிராக வாக்களிக்கிறார்.

ஹெலோ மைக் டெஸ்டிங்
அடுத்து வரும் இமான் அண்ணாச்சி பிரியங்காவுக்கு எதிராக வாக்களிக்கிறார். இதன் தொடர்ச்சியாக வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கழுத்தில் அதற்கான டேக் லைனுடன் அட்டை மாட்டி தொங்க விடப்படுகிறது அதன் படி அபிஷேக்கின் கழுத்தில் மாட்டப்படும் அட்டையில் ஹெலோ ஹெலோ மைக் டெஸ்டிங் என எழுதப்பட்டுள்ளது.

பிக்பாஸே கடுப்பாயிட்டாரு போல
இதேபோல் நிரூப்புக்கும் பிரியங்காவுக்கும் இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் என்ற அட்டை மாட்டப்படுகிறது. அபினய் கழுத்தில் பேசிக்கலி ஐ டோன்ட் நோ தமிழ் என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டை மாட்டப்பட்டுள்ளது. மேலும் ஸ்ருதி மற்றும் ஐக்கி பெர்ரிக்கும் இதுபோன்ற அட்டை மாட்டப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு எதில் முடியும் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். இந்த டாஸ்க் பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸே கடுப்பாயிட்டாரு போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











