இந்த வாரம் நெருப்பின் ஆளுமை.. கன்னாபின்னா சலுகைகளுடன் இசைவாணியை உசுப்பிவிட்ட பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நெருப்புக் காயினுக்கான ஆளுமை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் லக்ஸ்ரி பட்ஜெட் டாஸ்க்காக பஞ்ச தந்திரம் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐந்து காயின்கள் கொடுக்கப்பட்டன.

காயின்களை கைப்பற்ற வேண்டும்
இதை ஒருவருக்கொருவர் தெரியாமல் காயின்களை கைப்பற்ற வேண்டும். அப்படி காயின்களை கைப்பற்றும் போட்டியாளர்களுக்கு அந்த காயினுக்கு ஏற்ப சக்திகளும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. அந்த காயின்களை கொண்டு நாமினேஷனில் இருந்து கூட போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம்.

நிலம் நீர் காற்று என்..
இந்நிலையில் கடந்த வாரம் அந்த காயின்களில் நிரூப் நிலம் காயினை கைப்பற்றினார். பாவனி ஆகாயம் காயினை கைப்பற்றினார். இசைவாணி நெருப்பு காயினை கைப்பற்றினார். தாமரை செல்வி காற்று காயினை கைப்பற்றினார். வருண் நீர் காயினை கைப்பற்றினார்.

நிரூப்புக்கு பெட்ரூம் ஏரியா
இதனால் வருணுக்கு பாத்ரூம் ஏரியாவும், தாமரைக்கு கார்டன் ஏரியாவும் இசைவாணிக்கு கிச்சன் ஏரியாவும் வழங்கப்பட்டது. இதேபோல் நிரூப்புக்கு பெட்ரூம் ஏரியாவும் பாவனிக்கு லிவிங் ஏரியாவும் வழங்கப்பட்டது. அந்த ஏரியாக்களில் அவர்களுக்கு ஆளுமையும் வழங்கப்பட்டது.

வேக் அப் பாடல்
பின்னர் அந்த சலுகைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் நெருப்பு காயினுக்கான சலுகையை வாரி வழங்கியுள்ளார் பிக்பாஸ். இதன் அடையாளமாக வேக் அப் பாடலாக நெருப்பு கூத்தடிக்குது காத்து கூத்தடிக்குது பாடலை போட்டனர். தொடர்ந்து கிச்சன் ஏரியாவை கைப்பற்றியுள்ள இசைவாணிக்கு கன்னாபின்னாவென ஆற்றல்களை கொடுத்துள்ளார்.

கிச்சன் ஏரியாவுக்குள் ஆற்றல்
இதன்மூலம் கிச்சன்க்குள் யார் வரலாம், கிச்சன்க்குள் யார் வரக்கூடாது, யார் என்ன சாப்பிடலாம், யார் சாப்பிடக் கூடாது என்பதை அவர்தான் முடிவு செய்யலாம் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கிச்சன் ஏரியாவுக்குள் தனது ஆற்றலை காட்டி வரும் இசைவாணி, தன்னை கேட்காமல் யாரும் எண்ணெய் எடுக்கக்கூடாது, சமையல் பொருட்களை தன்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கக்கூடாது என ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











