லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் ஓபி அடித்த பாவனி அன்ட் மதுமிதா.. பிக்பாஸ் கொடுத்த தண்டனையை பாருங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் புரமோவில் டைனிங் ஏரியாவில் அமர்ந்து பேசும் பாவனியும் ஸ்ருதியும் நேற்று நடந்த சம்பவங்கள் குறித்து பேசினர்.
குறிப்பாக சக போட்டியாளரான ராஜு வார்த்தையை விட்டுவிட்டதாக கூறி டார்கெட் செய்தனர். அதனை தொடர்ந்து இரண்டாவது புரமோ வெளியானது.

ஊரு விட்டு ஊரு வந்து டாஸ்க்
இதில் நெருப்பு காயினை வைத்துள்ள இசைவாணி, ஏனோதானோ என இருப்பதை எச்சரித்தார் பிக்பாஸ். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் நேற்று தொடங்கிய லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கான ஊரு விட்டு ஊரு வந்து டாஸ்க் குறித்து பேசுகிறார் பிக்பாஸ்.

கிராமத்தினர் ஒரு குழு
ஊரு விட்டு ஊரு வந்து டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் நகரத்தினர் என ஒரு குழுவாகவும் கிராமத்தினர் என மற்றொரு குழுவாகவும் என இரண்டு குழுக்களாக உள்ளனர். இதில் கிராமத்தினர் குழுவுக்கு அக்ஷரா ரெட்டி தலைவராகவும் நிரூப் நகரத்தினர் குழுவுக்கு தலைவராகவும் உள்ளனர்.

முழு ஈடுபாட்டுடன் பங்கேற்காதவர்
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோவில் ஊரு விட்டு ஊரு வந்து டாஸ்க்கில் நாள் முழுவதும் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுத்துக் கொள்ளாத இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்து கூறுமாறு குழுக்களின் தலைவர்களான அக்ஷரா மற்றும் நிரூப் ஆகியோருக்கு அறிவுறுத்துகிறார் பிக்பாஸ்.

இரவு முழுக்க தீ மூட்டி
இதனை கேட்ட நிரூப் தங்களின் குழுவில் பாவனி என கூறினார். அக்ஷரா ரெட்டி தங்களின் குழுவில் மதுமிதாவின் பெயரை கூறி அவர் கொஞ்சம் தூரமாக இருந்ததாக கூறினார். இதனைக் கேட்ட பிக்பாஸ் இரண்டு பேரையும் கார்டன் ஏரியாவில் இரவு முழுக்க தீ மூட்டி அணையாமல் பார்த்துக்கொள்ளுமாறு தண்டனை கொடுத்தார்.

சுவாரசியம் அற்ற நபர்
நேற்றைய எபிசோடிலேயே தாமரை விவகாரத்தில் பாவனியிடம் ஏன் டிரெஸிங் ரூம்முக்குள் சென்றார் என கன்னாபின்னாவென கேள்விகளை எழுப்பினார் நிரூப். அப்போதே தனது கேரக்டரை தவறாக காட்ட முயற்சிப்பதாக நிரூப்பிடம் ஏறினார் பாவனி. இந்நிலையில் இன்று நிரூப் பாவனி சுவாரசியம் அற்ற நபர் என்று கூறியுள்ளதால் அவரை கட்டம் கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











