நல்லவங்க மாதிரி வேஷம் போடாதீங்க... ஹவுஸ்மேட்டுகளை வெளுத்துவிட்ட பிக்பாஸ்... வேற லெவல்!
சென்னை: நல்லவங்க மாதிரி வேஷம் போடாதீங்க என்று ஹவுஸ்மேட்டுகளை வெளுத்துவிட்டார் பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் நமீதா மாரிமுத்து எதிர்பாராதவிதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து 17 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடர்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.

நாமினேஷனுக்கு முன்பு பிக்பாஸ் பேச்சு
இதில் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட தாமரை செல்வியையும், பாவனி ரெட்டியையும் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனுக்கு தேர்வாகினர். நாமினேஷன் புராசஸ்ஸிற்கு முன்பாக ஹவுஸ்மேட்டுகளுக்கு அதுகுறித்து அறிவித்தார் பிக்பாஸ்.

விவாதிக்கக் கூடாது
அப்போது ஒவ்வொரு போட்டியாளரும் தலா இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் நாமினேட் செய்யும் முன்போ பின்னரோ அதுகுறித்து சக போட்டியாளர்களிடம் விவாதிக்க கூடாது என்றும் கூறினார் பிக்பாஸ்.

நல்லவங்க மாதிரி வேஷம் போடாதீங்க
மீறி பேசினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார் பிக்பாஸ். எல்லாரும் நல்லவங்கதான் என்று நல்லவங்க மாதிரி வேஷம் போடாமல் நாமினேட் செய்யுங்கள் என்றும் வேற லெவலில் பேசினார் பிக்பாஸ். எல்லோரும் இதற்கு முன்பு நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டுதான் வந்திருப்பீர்கள் என்றும் மிரட்டலாக பேசி மிரள விட்டார் பிக்பாஸ்.

ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் அவதாரம்
கடந்த சீசன்களில் போட்டியாளர்களிடம் ரொம்பவே ஜாலியாக பேசினார் பிக்பாஸ். எல்லோரின் பெயரையும் சுறுக்கி செல்லமாக கூப்பிடுவது, அவ்வப்போது போட்டியாளர்களை கலாய்ப்பது என இருந்தார். இந்நிலையில் இந்த சீசனில் ஸ்ட்ரிக்ட் ஆபிஸகராக காட்டி அவதாரம் எடுத்துள்ளார் பிக்பாஸ்.

ரூடாகவே உள்ளார் பிக்பாஸ்
பிக்பாஸ் கடைசி வரை இப்படியே ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக இருப்பாரா அல்லது ஆரம்பத்திலேயே இடம் கொடுத்துவிடக் கூடாது என முகத்தைக் காட்டுகிறாரா என்பது போக போக தான் தெரியும். போட்டியாளர்கள் பெரும்பாலும் புது முகமாக உள்ள நிலையில் அவர்களிடம் கொஞ்சம் ரூடாகவே உள்ளார் பிக்பாஸ்.

ஒரு ஓட்டு வாங்கினாலே..
இதேபோல் நாமினேஷன் விதிகளிலும் பிக்பாஸ் சில மாற்றங்களை செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த சீசன்களில் எல்லாம் 2 ஓட்டுகளுக்கு மேல் பெறுபவர்களையே எவிக்ஷன் புராசஸ்ஸிற்கு கொண்டு செல்வார் பிக்பாஸ். ஆனால் இம்முறை ஒரு ஓட்டு வாங்கியவர்களையும் லிஸ்ட்டில் சேர்த்து விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











