கேப்டன் பதவியை தட்டிப்பறித்த பாவனி.. அவர்களுடன் கோர்த்துவிட்ட பிக்பாஸ்.. என்னலாம் நடக்கப்போகுதோ!

சென்னை: பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனான பாவனிக்கு பெனால்டியை கொடுத்து பெண் போட்டியாளர்களுடன் கோர்த்துவிட்டுள்ளார் பிக்பாஸ்.

பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமை எபிசோடுகளில் கேப்டன் டாஸ்க் நடைபெறுவது வழக்கம். இதில் அந்தந்த வாரங்களில் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் பெஸ்ட் பர்ஃபாமர்களாக தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள்.

இந்த வார கேப்டன் டாஸ்க்காக மியூஸிக்கல் சேர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த கேப்டன்ஸி டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டின் மொத்த ஹவுஸ்மேட்ஸும் பங்கேற்றனர்.

தட்டிப் பறித்த பாவனி

தட்டிப் பறித்த பாவனி

இந்தப் போட்டியில் வைல்டு கார்டு என்ட்ரியான அமீர் வெற்றி பெற்றார். ஆனால் பாவனி ரெட்டி தனது காயினை பயன்படுத்தி அமீரின் கேப்டன் பதவியை தட்டிப் பறித்தார். பிக்பாஸ் வீட்டின் கேப்டனான பாவனிக்கு பெனால்டி கொடுத்தார் பிக்பாஸ். அதன்படி பெண் போட்டியாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கூறினார்.

பெண் போட்டியாளர்களுக்கு உதவியாளராக

பெண் போட்டியாளர்களுக்கு உதவியாளராக

அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களுக்கு மேக்கப், சிகை அலங்காரம் என அவர்கள் செய்வதோடு அவர்கள் கேட்கும் பொருட்களை கொண்டு வந்து கொடுப்பதில் இருந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என கூறினார் பிக்பாஸ். இதனைக் கேட்ட பிக்பாஸ் நிச்சயமாக செய்கிறேன் என்று உறுதி கொடுத்தார்.

பர்சனல் வேலை மட்டும்தான் செய்வேன்

பர்சனல் வேலை மட்டும்தான் செய்வேன்

ஏற்கனவே அக்ஷராவுக்கும் பாவனிக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஆகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் கிட்சனில் வேலைக்காக பாவனியின் உதவியை கேட்டார் அக்ஷரா. இதனால் கடுப்பான பாவனி, அக்ஷராவிடம் எகிறினார். உங்கள் பர்சனல் வேலைக்கு மட்டும் கூப்பிடுங்கள் பாவனி என முகத்தை காட்டினார்.

என் தலையில் இறக்கி விடுவீர்கள்

என் தலையில் இறக்கி விடுவீர்கள்

அதற்கு பதில் கூறிய அக்ஷரா என்ன உதவி கேட்டாலும் நீங்கள் செய்ய வேண்டும் என்றார். அதனைக் கேட்ட பாவனி, அப்படியானால் உங்கள் வேலை அனைத்தையும் என் தலையில் இறக்கி விடுவீர்கள் என்று கோபப்பட்டார். இதனைக் கேட்ட அக்ஷரா சும்மா கேட்டதற்கே இப்படி கோபப்பட்டால் எப்படி என்பதை போல பேசிவிட்டு சென்றார்.

Recommended Video

என்னோட Divorce-கு அப்பறம் நான் ஒடஞ்சிட்டேன் Samantha Opens Up about NagaChaitanya Divorce
மோதல் வெடிக்கும்..

மோதல் வெடிக்கும்..

இதனை பார்த்த நெட்டிசன்கள் இரண்டு பேருக்குமே ஒருவரை ஒருவர் பிடிக்காது என்பதால் இந்த வாரம் முழுக்க இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் என்றும் இது வேற லெவலில் முடியும் என்றும் கூறி வருகின்றனர். பாவனி கேப்டனாக இருக்கும் இந்த வாரம் முழுக்க நிச்சயம் தாமரை மற்றும் அக்ஷராவுடன் மோதல் வெடிக்கும் என்றும் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X