அரசியல் மாநாடான பிக்பாஸ் வீடு.. அரசியல்வாதிகளான ஹவுஸ்மேட்ஸ்.. களைக்கட்டிய லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்!
சென்னை: இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாறியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஏதாவது ஒரு கான்செப்ட் அடிப்படையில் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கிராமம் - நகரம், பொம்மை டாஸ்க், பள்ளிக்கூட டாஸ்க், டிவி டாஸ்க் என பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் மாநாடு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்சிக்கு 4 பேர்
இதற்காக பிக்பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாறியுள்ளது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தலா 4 பேர் விதம் மூன்று அரசியல் கட்சிகளாக பிரிந்துள்ளனர். அதன்படி சிபி, ராஜு, தாமரை, நிரூப் ஆகியோர் ஒரு கட்சியாக உள்ளனர்.

மக்கள் முன்னேற்ற கழகம்
அவர்களின் கட்சிக்கு பிக்பாஸ் மக்கள் முன்னேற்ற கழகம் என பெயரிட்டுள்ளனர். அவர்களின் கட்சி சின்னமாக நட்சத்திரத்தை அறிவித்துள்ளனர். தொடர்ந்து தங்கள் கட்சியின் கொள்கைகளை சிபி அறிவித்தார். அந்த கட்சியின் மகளிர் அணி தலைவராக தாமரை செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

என்பிபி தலைவர் சஞ்சீவ்
இதேபோல் சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, வருண், அக்ஷரா ஆகியோர் ஒரு கட்சியாகவும் உள்ளனர். அவர்களின் கட்சிக்கு என்பிபி என பெயர் வைத்துள்ளனர். கட்சியின் சின்னமாக நெற்றிக்கண்ணை அறிவித்துள்ளனர். அந்த கட்சியின் தலைவராக சஞ்சீவ் உள்ளார். தங்கள் கட்சியின் கொள்கையை பெரும்பாலும் நகைச்சுவையாகவே கூறினார் சஞ்சீவ்.

பிரியங்கா தலைவர்
மூன்றாவதாக பிரியங்கா, அமீர், பாவனி, அபினய் ஆகியோர் ஒரு கட்சியாக உள்ளனர். அவர்களின் கட்சிக்கு உரக்க சொல் என பெயர் வைத்துள்ளனர். அந்த கட்சியின் தலைவராக பிரியங்கா உள்ளார். கட்சியின் சின்னமாக ஒலி வாங்கியை அறிவித்துள்ளனர். அவர்களின் கட்சி கொள்கைகள் படு சீரியஸாக உள்ளது.


Click it and Unblock the Notifications











