twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டபுள் மீனிங்கில் பேசி முகம் சுளிக்க வைத்த ராஜு.. சிபி.. வாட் நான்சென்ஸ் என டென்ஷனான மதுமிதா!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராஜுவும் சிபியும் டபுள் மீனிங்கில் பேசியதை கேட்டு வாட் நான்சென்ஸ் என டென்ஷன் ஆகிவிட்டார் மதுமிதா.

    விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இருந்து நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறிவிட்டார்.

    கெட்ட வார்த்தைய கத்துக்கவே 6 மாசம் ஆயிடுச்சு.. காலேஜ்ல பொறுக்கி ஆயிட்டேன்.. ஓபனா பேசிய சிபி! கெட்ட வார்த்தைய கத்துக்கவே 6 மாசம் ஆயிடுச்சு.. காலேஜ்ல பொறுக்கி ஆயிட்டேன்.. ஓபனா பேசிய சிபி!

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் எஞ்சியுள்ள 17 போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா. ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா, ஃபேஷன் டிசைனராகவும் மாடலாகவும் உள்ளார்.

    தமிழ் பாடல் கற்றுக்கொடுத்து

    தமிழ் பாடல் கற்றுக்கொடுத்து

    இலங்கை தமிழரான மதுமிதா ஜெர்மனியிலேயே பிறந்து வளர்ந்ததால் தமிழ் ஓரளவுக்கு தான் பேசுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் மதுமிதாவுக்கு தமிழ் பாடலை அண்ணாச்சியும் ராஜுவும் கற்றுக்கொடுத்தனர். இது புரமோவிலேயே தெரிய வந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடிலும் அதுதொடர்பான காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

    தப்பும் தவறுமாக வாய்க்கு வந்ததை

    தப்பும் தவறுமாக வாய்க்கு வந்ததை

    ஹாலில் மதுமிதாவும் தாமரை செல்வியும் அமர்ந்திருக்க, இமான் அண்ணாச்சியை அழைத்து மதுமிதா பாடுவதை கேட்குமாறு கூறினார். அப்போது கட்டிக்கிற மாமனுக்கு அத்தனையும் அத்துப்படி என தப்பும் தவறுமாக வாய்க்கு வந்ததை பாடினார் மதுமிதா.

    கல்யாணத்துக்கு முன்பே முதல் இரவு

    கல்யாணத்துக்கு முன்பே முதல் இரவு

    பின்னர் அந்த பாடலுக்கு அர்த்தம் கேட்க, ராஜுவும் சிபியும் ஆங்கிலத்தில் ஆபாசமாக ட்ரான்ஸ்லேட் செய்து கூறினர். குறிப்பாக கல்யாணத்துக்கு முன்பே முதல் இரவு.. என அவருக்கு எல்லாமே தெரியும் என்றும் இரட்டை அர்த்தத்தில் கூறி சிரித்தனர்.

    வாட் நான்சென்ஸ்.. டென்ஷனான மது

    வாட் நான்சென்ஸ்.. டென்ஷனான மது

    இதனைக் கேட்ட இமான் அண்ணாச்சி வாட் நான்சென்ஸ் என்று கடுகடுக்க, மதுமிதாவும் வாட் நான்சென்ஸ் என்று கூறி டென்ஷனானார். பின்னர் வாட் நான்சென்ஸ் என்பதற்கு தமிழில் அர்த்தம் என்ன என்றும் கேட்டார். அதற்கும் அர்த்தம் கூறினார் இமான் அண்ணாச்சி.

    பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது

    பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது

    குடும்பத்துடன் குழந்தைகள் பெரியவர்கள் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் இதுபோன்று ஆபாசமாக பேசுவது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே அரைகுறை ஆடையில் பெண் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வலம் வரும் நிலையில் இப்படி டபுள் மீனிங்கில் பேசுவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Biggboss tamil 5: Biggboss housemates talks in double meaning. Raju and Sibi translate tamil song in english with double meaning.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X