மீண்டும் விடிய விடிய தீ மூட்டவிட்ட பிக்பாஸ்.. அண்ணாச்சியை பழிதீர்த்த இசை.. வேற லெவல் வில்லத்தனம்!
சென்னை: லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் குறைவான ஈடுபாட்டுடன் பங்கேற்ற இருவருக்கு மீண்டும் விடிய விடிய தீ மூட்டும் தண்டனையை கொடுத்தார் பிக்பாஸ்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஊரு விட்டு ஊரு வந்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ் கிராமத்தினர் மற்றும் நகரத்தினர் என குழுக்களாக உள்ளனர்.
இதனை முன்னிட்டு இரண்டு குழுக்களாக உள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே பல்வேறு போட்டிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இசைவாணியே தலைமை
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நெருப்பின் ஆளுமை கொடுக்கப்பட்டுள்ளதால் அந்த காயினை வைத்துள்ள இசைவாணியே எல்லா போட்டிகளுக்கும் நடுவராக இருந்து நடத்தி வருகிறார். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு பிக்பாஸ் கரன்சி வழங்கப்படுகிறது.

வருண் மற்றும் அபினய்
இந்நிலையில் இன்றைய எபிசோடின் தொடக்கத்தில் இன்று ஊரு விட்டு வந்த டாஸ்க்கில் குறைவான ஈடுபாட்டுடன் பங்கேற்ற போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்யுமா அந்தந்த அணி தலைவர்களுக்கு அறிவுறுத்தினார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து வருண் மற்றும் அபினய் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தீ அணையாமல்..
இதனை தொடர்ந்து அவர்களை கார்டன் ஏரியாவில் தூங்காமல் தீ மூட்டி அணைய விடாமல் விடிய விடிய பாதுகாக்க வேண்டும் என்று கூறினார் பிக்பாஸ். மேலும் இருவரையும் தூங்க விடாமல் கண்காணிக்கும் பணியை இசைவாணி யாரையாவது வைத்து மேற்கொள்ளலாம் என்றும் கூறினார் பிக்பாஸ்.

இசைவாணி மகிழ்ச்சி
பாவனியும் மதுமிதாவும் தண்டனை அனுபவித்த போது இசைவாணியையும் தூங்கவிடாமல் கண்காணிக்குமாறு கூறினார் பிக்பாஸ். இதனால் பயத்தில் இருந்த இசைவாணிக்கு யாரை நிர்ணயிக்கலாம் என்ற பிக்பாஸின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது.

பழி தீர்த்த இசைவாணி
உடனடியாக அண்ணாச்சியை கண்காணிக்குமாறு கூறி பழி தீர்த்துக் கொண்டார் இசைவாணி. ஏற்கனவே இசைவாணிக்கும் அண்ணாச்சிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. நேற்றைய எபிசோடில் இசைவாணியின் நடவடிக்கை சர்வாதிகாரி போன்று இருப்பதாக கூறினார் அண்ணாச்சி. இதனால் கதறி அழுதார் இசைவாணி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











