சுயபுத்தியை இழந்த நிரூப்.. டாஸ்க்கில் வச்சு செய்யும் அண்ணாச்சி அன்ட் ராஜு... இன்னைக்கு இவங்க போல!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் பிக்பாஸ் டிவி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் வீடு இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் ரெட் டிவி அணியில் அபிஷேக், நிரூப், பிரியங்கா, சிபி, வருண் உள்ளிட்டோரும் புளு டிவியில் இமான் அண்ணாச்சி, ராஜு, தாமரை, பிரியங்கா, அமீர் மற்றும் பாவனி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

வாய்ப்பு கொடுக்கவில்லை
நேந்றைய எபிசோடில் ரெட் டிவி அணியினர் முழுக்க முழுக்க பர்சனல் வெஞ்சன்ஸை காட்டினர். அவர்களின் ஒவ்வொரு பர்ஃபாமன்ஸிலும் தனிப்பட்ட தாக்குதல்களே தெரிந்தன. எதிர் அணியினர் தங்களின் கருத்தை கூற வாய்ப்பே கொடுக்கவில்லை ரெட் டிவியின் தொகுப்பாளராக இருந்த அபிஷேக் ராஜா.

இரண்டாவது புரமோ
இதேபோல் பிரியங்காவும் தனக்கு யார் மீதெல்லாம் வெறுப்பு உள்ளதோ அவர்களை அட்டாக் செய்தே நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அபிஷேக் ராஜாவையும் பிரியங்காவையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

சுய புத்தியை இழந்த நிரூப்
இதில் பேசும் இமான் அண்ணாச்சி சுய புத்தியை இழந்த நிரூப் என்று அவரை வச்சு செய்கிறார். தொடர்ந்து பேசும் ராஜு அபிஷேக் படிச்ச செய்தியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என நிரூப்பிடம் கேட்கிறார். அதற்கு நிரூப் என்ன பதில் சொன்னாரோ தெரியவில்லை, அபிஷேக் டென்ஷனாகி பதில் கூறுகிறார்.

போனில் பேசுவது போல்..
அதாவது அவர் ஒரு பெரிய பிளேயர் என்று நாம் தான் பார்க்கிறோமே தவிர அவர் எதிரணிக்குதான் ஆதரவாக செயல்படுகிறார். அதனால் தயவு செய்து அவரை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இதைத்தொடர்ந்து அண்ணாச்சியும் ராஜுவும் போனில் பேசுவது போல் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

என் வாழ்க்கையில விளையாடுறீங்களா?
அப்போது பேசும் அண்ணாச்சி நீங்க தனியா விளையாடுறீங்களா இல்ல கூட்டமா விளையாடுறீங்களா என கேட்கிறார். அதற்கு நிருப் போல் நான் தனியாதான் விளையாடுகிறேன், ஆனால் எல்லோரும் கூட்டமாக சேர்ந்து என் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூற ப்ளு டீம் அணியினர் கை கொட்டி சிரிக்கின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்றைக்கும் எண்டெர்டெய்ன்மென்ட் இருக்கும் போல என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











